பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தாழியில் அகப்பட்ட தயிர் போன்ற அரக்கர்களை அனுமன் மத்து போல் கடைந்து கலங்கச் செய்தான்: 'ஆழிப் பொருபடை நிருதப் பெரு வலி அடலோர், ஆய்மகள் அடு பேழ் வாய்த் தாழிப் படு தயிர் ஒத்தார், மாருதி தனி மத்து என்பதொர் தகை ஆனான்' (அக்ககுமாரன் வதைப் படலம்-30) அனுமன் இலங்கையை எரியூட்டியபோது, பறவைகள் கடலில் போய் விழுந்தன; அவற்றைப் பெரிய மீன்கள் விழுங்கின. மனத்தில் அருள் இல்லாத வஞ்சகரை அடைக் கலமாக அடைந்தவர். அழிவது போல் பறவைகளின் நிலைமை ஆயிற்று: 'வெருளும் வெம்புகைப் படலையின் மேற்செல வெருவி இருளும் வெங்கடல் விழுந்தன எழுந்தில பறவை; மருளின் மீன்கணம் விழுங்கிட - - உலந்தன; மனத்து ஒர் அருள் இல் வஞ்சரைத் நஞ்சம் என்று அடைந்தவர் மான' (இலங்கை எரியூட்டுப் படலம்-31.) இலங்கையினின்றும் அனுமன் புறப்பட்டு வானரரை அடைந்தபோது, தாய் வரக் கண்ட பறவைக் குஞ்சுகள் போல் வானரர்கள் மகிழ்ந்தனர்: 'பாய்வரு நீளத் தாங்கண் இருந்தன பறவைப் பார்ப்புத் தாய்வரக் கண்ட தன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா” (திருவடி தொழுத படலம்-3)