பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 அனுமனின் உடல் முழுதும்- உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் இருந்த புண்கட்கு அளவே இல்லையாம். உலகம் தோன்றியதிலிருந்து எத்தனை நாள்கள் சென்றி ருக்கும் என எண்ணிக்கை தர முடியாதது போன்று அளவற்று இருந்த புண்களை நோக்கி வானரர் வருந்தினர். தாள்களில் மார்பில் தோளில் தலைகளில் தடக்கை தம்மில் வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் நாள்கள்மேல் உலகில் சென்ற எண்என நம்பி நண்ண ஊழ்கொள நோக்கி நோக்கி உயிர் உக உளைந் துயிர்த்தார்' (6) அளவே இல்லை என்று கூறுதற்கு, ஆற்று மணலினும் பல- கடல் மணலினும் பல என்றெல்லாம் புலவர்கள் புகல்வது மரபு. வள்ளுவரோ, துறவிகளின் பெருமையின் அளவுக்கு, உலகில் இதுவரை இறந்தவர் எண்ணிக் கொண்டால் எவ்வளவோ அவ்வளவு என எல்லை கூறினார்: "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று' (22) என்பது திருக்குறள் பாடல். கம்பரோ, ஈண்டு, உயர் அளவை அறிவிக்க, உலகம் தோன்றியதிலிருந்து கழிந் துள்ள நாள்களை எண்ண முடியாதது போன்றது என்று மொழிந்துள்ளார். இவ்வாறே, கம்பரின் உவமை- உருவகக் கற்பனையின் பெருமைக்கு எல்லை ஏது? இன்னும் சில உவமைகள், இந்நூலில் வேறிடங்களில்-ஆங்காங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.