பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 இந்த அணி அமைந்த சுந்தரகாண்டப் பாடல்கள் சில வற்றை இனிக் காண்பாம் ; இலங்கை மாதேவி அனுமனை நோக்கி, உன்னால் எல்லா வெற்றிகளும் பெற முடியும்; உன்னால் முடியாதது உண்டோ? (இல்லை). நீ இலங்கைக்குள் சென்று செயல் படுக என்று கூறுகின்றாள். இங்கே 'அறம் வெல்லும்பாவம் தோற்கும்-என்பதைச் சொல்லவும் வேண்டுமா? என்னும் பொது உண்மையும் பாடலில் அமைந்துள்ளது: 'அன்னதே முடிந்ததையே! அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்னும் ஈது இயம்பவேண்டும் தகையதோ? இனி மற்றுன்னால் உன்னிய எல்லாம் முற்றும்; உனக்கும் முற்றாத துண்டோ? பொன்னகர் புகுதி என்னாப் புகழ்ந்தவள் இறைஞ்சிப் போனாள்' (ஊர் தேடு படலம்-93) இந்தப் பாடலுக்கு முன்னேயும் அனுமனது வெற்றி, கூறப்பட்டுள்ளது. அதனது நோக்கம் அறிவிக்கப்பட் டுள்ளது. எனவே, இவையெல்லாவற்றையும் அடிப்படை யாகக் கொண்டு, 'அறம் வெல்லும்-பாவம் தோற்கும்’ என்னும் பொது உண்மை புகலப்பட்டுள்ளது. - அகழியின் கரை பளிங்குக் கல்லால் ஆனதால் கரைப் பகுதிக்கும் தண்ணிருக்கும் வேற்றுமை தெரியவில்லை. தெளிந்த சிந்தையுடைய நல்லவரும் இழிந்த சிறுமதிபடைத் தவரொடு சேர்ந்தால் இனங் கண்டு கொள்ள முடியாது. 'பளிங்கு செற்றிக் குயிற்றிய பாய் ஒளி விளிம்பும் வெள்ளமும் மெய் தெரியாது; மேல் தெளிந்த சிந்தையரும் சிறியார்க ளோடு அளிந்த போது அறிதற்கு எளிதாவரோ?” (152) சு-15