பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கையை இருள் கவ்விக் கொண்டதாம். இங்கே கம்பர் மற்று மொரு சுவையான-புதுமையான கற்பனை கூறுகிறார். புகழை வெண்ணிறமாகச் சொல்வது இலக்கிய மரபு, ஒன்றே ஒன்று மட்டும் காண்பாம். சிவப்பிரகாச அடிகளார் 'பிரபுலிங்கலீலை' என்னும் தம் நூலின் கைலாசகதி" என்னும் பகுதியில், 'சிவனது புகழ் எல்லாம் திரண்டு ஒரு குன்றாக இருந்ததுபோல், வெள்ளைக்கைலை மலை தோற்றம் அளிக்கிறது' என்று கூறியுள்ளார். பாடல் வருமாறு:- - ' கொள்ளைவண் டி.ழிந்து தாது குடைந்துமூக் குழவு டைந்து கள்ளழிந் தொழுகு செம்பொன் கடுக்கைவேய்ந் திலகு மேனி வள்ளல்வெண் புகழ் திரண்ட வளங்கெழு கைலைக் குன்றில் வெள்ளிவந் தத்தி யாச மாகவே விளைந்த தம்மா’’ (4) என்பது பாடல். 'புகழ் வெண்ணிறம். எனவே, அதற்கு எதிரான இகழ் கருநிறம் என்பது தானே விளங்கும், இராவணனுக்கு இருந்த புகழ் அவன் சீதையைச் சிறை. வைத்ததால் வெண்மை நீங்கிய புகழாகிவிட்டதாம்.அங்ங்ன மெனில், அவனுக்குக் கருநிறமான இகழ் பெரிய அளவில் உண்டாகி விட்டது என்பது பெறப்படும், இராவணனது இந்தக் கரிய இகழ் சூழ்ந்து கொண்டது போலவும் இலங் கையை இருள் கவ்விக் கொண்டது என்கிறார் கம்பர் பாடல்: 'வண்மை நீங்கா நெடுமரபின் வந்தவன் பெண்மை நீங்காத கற்புடைய பேதையைத் திண்மை நீங்காதவன் சிறைவைத்தான் எனும் வெண்மை நீங்கிய புகழ் விரிந்த தென்னவே' (44) என்பது பாடல், மற்றும் சில கற்பனைகள்: