பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 'கன் மத்தை ஞாலத்தவர் யாருளரே கடப்பார்? பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் நன்மத்தம் நாகத்தயல் சூடிய நம்பனேபோல் வேறாய். உன் மத்தன் ஆனான், தனை ஒன்றும் உணர்ந்திலாதான் (84) கன்மத்தை ஞாலத்தவர் யாருளரே கடப்பார்-என்பது பொது உண்மை. பாட்டில் பொது உண்மை இறுதியில் பெரும்பாலும் இருக்கும் சிறுபான்மை முதலிலும் இருக்க லாம். (உருக்காட்டுப் படலம்-48) அனுமன் அசோக வனத்தை அழிப்பது பற்றிச் சினத் தோடு எண்ணிப் பார்க்கிறான்: இராவணனின் பத்துத் தலைகளையும் கலங்கச் செய்து அவனைச் சிறையிட்டு வெல் வேன்; இல்லாவிடின் , எங்களைக் காத்து அடைக்கலம் தந்த இராமனுக்கு நாங்கள் என்ன நன்மை செய்தவர்களாவோம்? ஒருவர்க்கு ஒருவர் தஞ்சம் அளித்தல் என்பது என்ன வாகும்? 'வஞ்சனை அரக்கனை நெருக்கி நெடு வாளால் அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே வெஞ்சிறையில் வைத்து மிலென் வென்றும் இலென் என்றால் தஞ்சம் ஒருவர்க்கொருவர் என்றல் தகவாமோ?? (பொழில் சிறுத்த படலம்-3) ஒருவர்க் கொருவர் தஞ்சம் என்றல் தகவாயிருக்க வேண்டும்-என்பது பொது உண்மை. காவல் காக்கும் அரக்கியரிடம், சீதை முன்பு தன்னை இராவணன் ஏமாற்றி எடுத்து வந்தது பற்றிக் கூறுகிறாள்; இராவணன் மாயமானை அனுப்ப, இராமர் பின் தொடர, மாயமான் இராமன் போல் கத்த, இது அரக்கரின் மாயம் என்று இலக்குமணன் சொல்லவும் நம்பாமல், மெய்யென