பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 'அன்னதாம் நகுசொல் கேட்ட சாரதி, ஐய கேண்மோ! இன்னதாம் என்னல் ஆமோ உலகியல்? இகழல் அம்மா! மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ? சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணரச் சொன்னான்' (அக்ககுமாரன் வதைப் படலம்-22) உலகியல் இன்ன தாம் என்னல் ஆமோ? இன்னது. என்று கூறமுடியாது- என்பது பொது உண்மை. பாட்டின் இடையிலும் பொது உண்மை இருக்கலாம். கதை மாந்தர் சொல்வதாகவும் பொது வண்மை இருக்கலாம். இவ்வாறு பல பாடல்களில் வேற்றுப் பொருள் வைப்பு" அணி அமைத்துக் கம்பர் பாடியுள்ளார். தற்குறிப்பேற்ற அணி அடுத்துத் தற்குறிப்பேற்ற அணி பற்றிக் காண்பாம்’ ஒரு பொருளின் நிகழ்ச்சி இயல்பாக - இயற்கையாக நிகழ, புலவன் அதை விட்டு, இன்ன காரணத்தால் இது நிகழ்கிறது. என்று தானாக-தன் குறிப்பை-தனது கருத்தை ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பு அணியாகும். . 'பெயர் பொருள் அல்பொருள் என இரு பொருளினும் இயல்பின் விளை திறனன் றி அயலொன்று தான் குறித்தேற்றுதல் தற்குறிப் பேற்றம்' (56). என்பது தண்டியலங்கார நூற்பா-இதற்கு ஒர் எடுத்துக் காட்டு விளக்கம் காண் பாம்: காலையில் ஞாயிறு தோன்றுகிறது-இருள் மறைகிறது. தாமரை மொக்குகள் விரிந்து மலர்கின்றன -இது இயற்கை யாக நடப்பது, ஆனால் ஒரு புலவன் என்ன சொல்கிறான்: