பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 “எழுத்தின் கூட்டம் இடை பிறிது இன்றியும் பெயர்த்தும் வேறு பொருள்தரின் மடக்கு எனும் பெயர்த்தே' (92). என்பது தண்டியலங்கார நூற்பா. அந்த மடக்கு, ஒரடிக்குள்ளேயும், ஈரடிக்குள்ளேயும் மூன்றடிக்குள்ளேயும் நான்கடிக்குள்ளேயும் பலவாறு மடங்கி வரும். 'அதுதான், ஒரடி முதலா நான் கடி காறும் சேரும் என்ப தெளிந்திசி னோரே' - (93). என்பது தண்டியலங்கார நூற்பா. இந்த அடிப்படையுடன் கம்பரின் பாடல்களுக்கு வருவாம்-பொழில் இறுத்த படலத் தில் 31 முதல் 35 வரையுள்ள ஐந்து பாடல்களிலும் மடக். கணி உள்ளது. வருமாறு : 'பாடலம் படர்கோடும், பண் இசைப் பாடலம் பணிவண்டோடும், பல்திரைப் பாடலம் புயர் வேலையில் பாய்ந்தன பாடலம் பெறப் புள்ளினம் பார்ப்பொடே' (31). இந்தப் பாடலில், பாடலம்’ என்பது, நான்கு அடி களின் தொடக்கத்திலும் திரும்பத் திரும்ப மடங்கி வந் துள்ளது. இதன் பொருளாவது :- அசோக வனத்தின் அழிவு பாடு கூறப்படுகிறது. இதைப் பின்வருமாறு பிரித்துக் கொள்ள வேண்டும். 'பாடலம் படர் கோங்கொடும் பண் இசைப் பாடல் அம்பனி வண்டாடும் பல்திரைப் பாடு அலம்பு உயர்வேலையில் பாய்ந்தன பாடு அலம்பெறப் புள் இனம் பார்ப்பொடே. கருத்துரை : பறவை இனங்கள் தம் குஞ்சுகளுடன் பாதிரி மரம், போங்கமரம், பண் இசை பாடும் அழகிய