பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 குளிர்ந்த வண்டுகள் ஆகியவற்றோடு, பல அலைகள் கரையை மோதி அலம்பும் பெரிய கடலுள் பாய்ந்தன. பதவுரை:-புள் இனம் = பறவை இனங்கள்; பார்ப் பொடு = தம் குஞ்சுகளுடன், பாடலம்-பாதிரிமரம், படர்= பரந்து படர்ந்துள்ள, கோங்கொடும் = கோங்குமரம் ஆகிய வற்றொடும், பண் இசை=பண்ணோடு இசையை, பாடல்= பாடுதலையுடைய, அம் = அழகிய, பணி = குளிர்ந்த, வண் டொடும் = வண்டுகளோடும், பல்திரை = பல அலைகள், பாடு = பக்கக் கரையை அலம்பும் = மோதி அலம்புகிற, உயர் வேலையில் = பெரிய கடலுள், பாய்ந்தன= பாய்ந்து புகுந்தன-என்பது பதவுரைப பொருள் இங்கே பாடலம் என்பது நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு. பொருள் தருவதைக் காணலாம். அடுத்தது: 'வண்டலம்புநல் ஆற்றின் மராமரம், வண்டலம்புனல் ஆற்றில் மடிந்தன; விண்டலம் புகம் நீங்கிய வெண்புனல், விண்டலம் புக நீள் மரம் வீழ்ந்ததே." (32). இந்தப் பாடலில் வண்டலம்’ என்பது முதல் இரண்டடி களிலும் விண்டலம்பு’ என்பது ஈற்று இரண்டடிகளிலும், அடி முதலில் மடங்கி வந்துள்ளன. இப்பாடலைப் பின் வரு, மாறு பிரித்துக் கொள்ளல் வேண்டும்: - 'வண்டு அலம்புநல் ஆற்றின் மராமரம், வண்டல் அம்புனல் ஆற்றில் மடிந்தன; விண்டு அலம்பு கம்.நீங்கிய, வெண் புனல் விண்கலம் புக நீள் மரம் வீழ்ந்த வே' கருத்துரை : அனுமன் எறிந்த மரங்களுள், வழிப் பாதையிலிருந்து மரங்கள் சில வண்டல் நீர் பொருந்திய ஆற்றில் விழுந்தன. அனுமன் உயரே தூக்கியெறிந்த நீண்ட மரங்கள் விண்ணிலே புக விண்ணிலே ஒடுகின்ற நீர் சிதறி அகலும்படி செய்து (ஆகாயக்) கங்கையில் வீழ்ந்தன.