பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 彎 ஞாயிறும் திங்களுமாகிய கதிர்கள் இராவணனுக்கு அஞ்சி அன்று, இலங்கை மதில்களின் உயரத்தின் மேல், தாண்டிச் செல்ல முடியாமையால் விலகிச் செல்வதாக அனுமன் அறிந்து வியக்கிறான். பாடல்: 'கலங்கல் இல் கடுங்கதிர்கள் மீது கடிது ஏகா அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனில் அன்றால் இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே. விலங்கி அகல்கின்றன விரைந்தென வியந்தான்' (61). கறுத்தவர் நடுவே வெளுத்தல் அரிது என்று (தருமம்). அறம் ஒளித்திருந்தாற் போன்று வீடணனும் கறுத்துக் காணப்பட்டானாம். பாடல்: "பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்துப் பசுந்தேன் துளிக்கும் கற்பகப் பந்தரில் கருநிறத் தோர்பால் வெளுத்து வைகுதல் அரிதென அவர் உரு மேவி ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான் தனை உற்றான்' (134}. அரக்க மகளிர், நிலா முற்றத்தில் இருந்து, வானத்து. விண் மீன்களைக் கையில் வாரி மணிக்கழங்கு ஆட்டம் (காய் ஆட்டம்) ஆடுகின்றனர். பாடல்: 'மேல்நிவந்து எழுந்த மாட வெண்ணிலா முன்றில் நண்ணி, வானமீன் கையில் வாரி மணிக் கழங்கு ஆடு வாரும்' (181), தங்களை அரமகளிர் குளிப்பாட்டப் பயன்படுத்தும் வான ஆற்று (ஆகாய கங்கை) நீர் குளிர்ச்சியாக இல்லை.