பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 மலர்களாகிய விண்மீன்கள், நந்த = மிகவும், நாறின = ஒளி வீசின. சிந்து-புளிய மரங்கள், திரைக்கடல் = அலையும் கடலில் உள்ள, வானம் = நீரலைமேல், திரிந்து உக = சுழன்று விழ, வால் நந்து = வெண்மையான சங்குகள், செம் மணி=செம்மையான (சிறந்த) முத்து மணிகள், சிந்த = சிந்தி விழும்படி, இரிந்த = அஞ்சியோடின. மேற் கூறிய ஐந்து பாடல்களிலும், கம்பர், மடக்கு அணி அமைத்துச் சொல் விளையாட்டு புரிந்து ஒரு வகை யான சுவை பயக்கச் செய்துள்ளார். ஒப்புவினை புணர்ப்பு அணி தண்டியலங்காரத்தில் குண அணிகள் என்னும் பிரிவைச் சார்ந்த சில அணிகள் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளன. அவற்றுள் சமாதி' என்பது ஒர் அணியாகும். விளக்கம் வருமாறு : ஞாயிறு விண்ணில் உள்ள இருளைக் குடித்து ஒளியைக் கக்கி எழுகின்றதாம். இந்தக் கருத்து, பெரும்பாண் ஆற்றுப்படை' என்னும் நூலின் முதல் இரண்டடிகளில் சொல்லப்பட்டுள்ளது : 'அகலிரு விசும்பின் பாயிருள் பருகிப் பகல்கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி’என்பது பாடல் பகுதி. பருகி= குடித்து; கான்று = கக்கி. பருகுதலும் கக்குதலும் உயர்திணைப் பொருள்களின் வினைகள் (செயல்கள்) ஞாயிறு எதையும் பருகுவதோ கக்கு வதோ செய்வதில்லை. இங்கே, உயர்திணைப் பொருள் களுக்கு உரியனவாகக் கூறாமல், அவை,போன்று.அவற்றை ஒப்பி (ஒத்து)யுள்ள வேறொரு பொருளுக்கு உரிய வினை களாக அவை கூறப்பட்டுள்ளன. இவ்வாறு உரிய பொருள் மேல் கூறாது, ஒப்புடைப் பொருள் மேல் வினையைப் (செயலைப்) புணர்த்து (சேர்த்து) உரைப்பது சமாதி அணி யாகும்: