பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 ஆதி சேடனது நஞ்சு உலகத்தைச் சாப்பிட்டுப் புகை யோடு எழுந்ததுபோல் இலங்கையில் இருள் சூழ்ந்திருந்த தாம்: 'பாய்விடம், உணங்கலில் உலகெலாம் முறையின் உண்டு வந்து புகையொடும் எழுந்ததென்னவே' (2-43). விடம்=நஞ்சு. உயிருள்ள பொருள்கள்போல் நஞ்சு உண்பது (சாப்பிடுவது இல்லை). வழியை இருள் தந்ததாம். வெவ்வழி இருள்தர' (2-45) தருதல் இருளின் வினையன்று. நந்தவனங்கள் கலங்கி நடுங்கினவாம்: நந்தவனங்கள் கலங்கி நடுங்கவே (6-26) பூந்தோட்டம் கலங்குதலோநடுங்குதலோ இல்லை. ... சம்புமாலி போர்க்கு வர, தேவர்களை அச்சம் சுற்றிக் கொண்டதாம்: 'அமரரை அச்சம் சுற்ற' (8-14). அச்சம் உயிர்ப் பொருள் போல் எதையும் சுற்றுவதில்லை. இலங்கையில் மணியும் பொன்னும் இருளைக் கிறித்து நீக்கினவாம்: மணியும் பொன்னும் விசும்பு இருள் கிழித்து நீக்கும்".-(8-16) மணியும் பொன்னும் எதையும் தாமாகக் கிழிப்பதில்லை-இருளும் கிழிவது இல்லை. அரக்கர் நெஞ்சில் அச்சம் குடி புகுந்ததாம்: 'அரக்கர் நெஞ்சில் குடிபுக அச்சம் (8-17). அச்சம் புது மனை புகு விழா (குடிபுகல்) நடத்துவதில்லை. சு-16