பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251 "இலங்கை எரியூட்டுப் படலத்தில் நெருப்பு பருகுதலும் உண்ணுதலும் சொல்லப்பட்டிருப்பதில் வியப்பு இல்லை. திருவடி தொழுத படலத்தில்-ஒரு பாடலில், ஒப்பு வினைபுணர்ப்பு (சமாதி) அணி, மிகவும் சுவையுற அமைந் துள்ளது. இலங்கையிலிருந்து மீண்டு வானரர்களை அடைந்த அனுமன், தான் இலங்கையில் போர் புரிந்து வென்றமையை தற்பெருமை கூறுகிறான் என்று எண்ணுவரெனக் கருதிச் சொல்லாமல் இருந்தான். ஆனால், வானரர்கள் அறிந்து கொண்டார்களாம். அனுமன் போர் புரிந்துள்ளான் என் பதை அவன்மேல் உள்ள புண்களே சொன்னவாம்; அனுமன் வெற்றி பெற்றுள்ளான் என்பதை, அவன் உயிருடன் மீண்டு வந்தமையே உரைத்ததாம்; அனுமன் இலங்கையைத் தீயிட்டு அழித்து வந்திருக்கிறான் என் பதைத் தென் திசையில் தெரியும் புகையே ஒதிற்றாம்; அரக்கர்களின் வலிமையைச் சீதை மீண்டு வராமையே ாட்டிற்றாம் இவ்வாறு குறிப்பினாலேயே வானரர்கள் தெரிந்து கொண்டனராம். பாடல் வருமாறு: 'பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை உரைசெய, ஊர் தீயிட்டது ஓங்கிடும் புகையே ஒதர, கருதலர் பெருமைதேவி மீண்டிலாச் செயலே காட்டத் தெரிதர உணர்ந்தோம்; பின்னர் என் இனிச் செய்தும் என்றார்.' (10)