பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 இலங்கையில் உள்ள மாடங்களின் கட்டுக்கோப்பு எதைக் கொண்டு இயற்றப்பட்டது? பொன்னை இழைத்தா -மணிகளைப் பதித்தா-மின்னலைக் கொண்டு. அமைத்தா - வெயிலைக்கொண்டு சமைத்தா - எதைக் கொண்டு இயற்றப்பட்டது என்பது புரியவில்லையே என அனுமன் வியக்கின்றான். பாடல் : ஊர்தேடு படலம். பொன் கொண்டு இழைத்த, மணியைக் கொடு பொதிந்த, மின் கொண்டு அமைத்த, வெயிலைக கொடு சமைத்த? என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாதவன்கொண்டல் விட்டு மதிமுட்டுவனமாடம்” (1). இது பாடல்: மாடங்கள் மதியை (திங்களை) முட்டுகின்றன . வாம். மகளிர் வானத்துக் (ஆகாய) கங்கை நீரைத் தம் கையில் அள்ளி விளையாடுகின்றாராம். மகளிர், குழலும் வீணையும் யாழும் தோற்று வருந்தும் படி இனிய மழலை மொழியைக் கிளிக்குக் கற்றுத் தருகின் றனராம் அம்மகளிரின் நிழல் சுவர்களில் படுந்தோறும், அவர்களின் உருவத்தோற்றத்திற்கும் நிழலின் தோற்றத் திற்கும் வேற்றுமை தெரியவில்லை என்பதாகக் கம்பர் ஒரு புது மாதிரிக் கற்பனை செய்துள்ளார். 'குழலும் வீணையும் யாழும் என்று இைை யன குழைய மழலை மென்மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர் சுழலும் நன்னெடுந் தடமணிச் சுவர்தொறும் குவன்றும் நிழலும் தம்மையும் வேற்றுமை தெரிவரு நிலைய' (6).