பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இது பாடல். தென்னகத்துக் குழலோடும் யாழோடும் வடக் கத்திய வீணையும் சேர்ந்து கொண்டதை இப்பாடலில் காணலாம். இலங்கையின் மாட மாளிகை முதல் குதிரைக் கொட்டில் வரை எங்கும் மணிகளின் பேரொளி ஞாயிறு வெட்கும்படி மிகவும் வீசுவதால், இலங்கையைத் துறக்கம் ஆகக் (சொர்க்கம் ஆகக்) கருதவேண்டும், துறக்கமோ {சொர்க்கலோகமோ) இலங்கையை நோக்க நரகமாகக் கருதப்படும். பாடல் : "மரகதத்தினும் மற்றுள மணியினும் வனைந்த குரகதத் தடந்தேர் இனம் அவைபயில் கொட்டில் இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால் நரகம் ஒக்குமால் நல்நெடுந் துறக்கம் இந்நகர்க்கு” - (14) இலங்கையில் பன்னிற மணிகளின் பேரொளி பாய்வ தால் கரிய அரக்கரும் கருமை நீங்கினராம்; திங்களும் (சந்திரனும்) நடுவில் உள்ள கரிய மறு நீங்கப் பெற்றதாம்: கருங்கடலும் பொன் உருகியிருப்பது போல் தோன்றிற்றாம். :பாடல் : 'திருகு வெஞ்சினத்து அரக்கரும் கருநிறம் தீர்ந்தார்; அருகு போகின்ற திங்களும் மறு அற்றது; அழகைப் பருகும் இந்நகர்த் துன்ஒளி பாய்தலின் பசும் பொன் உருகுகின்றது போன்றுளது உலகுகுழ் உவரி' (15)