பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 திருமாலிடம் வரம் பேற்ற மதுவும் கைடவனும், உனக்கு என்ன வரம் வேண்டும் எனத் திருமாலைக் கேட்க, உங்களைக் கொல்லும் வரம் வேண்டும் எனக் கூறித் திருமால் அவர்களைக் கொன்றார் என்பது புராண வரலாறு. இவர்களுள் மது கும்பகருணனாகவும், கைடவன் அதிகாயனாகவும் இலங்கையில் வந்து பிறந்தனராம். அரக்கர்கள், அரக்கியர்களின் வாயிலிருந்து ஊறிவரும் எயிற்று நீரை அருந்தி மயங்கினராம். அந்த (அமுத பான) நீர், ஆலை- மலைச்சாரல்- சோலை- கள் விற்பவர் வீடு- சோனகர் வீடுட"முதலிய இடங்களில் கிடைக்கும் மதுவினினும் இனிமையாயிருந்ததாம்: "ஆலையில் மலையின் சாரல் முழையினில் அமுதவாகச் சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய வேலையில் கொளஒணாத வேற்கணார் குமதச் செவ்வாய் வால்எயிர் றுாறு தீந்தேன் மாந்தினர் மயங்குவாரை” (110) இப்பாடலில் சோனகர் என்பவர் குறிப்பிடப்பட் இள்ளனர். சோனர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்த யவனர்கள் ஆவர். இவர்கள் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக் கும் வணிகம் செய்ய வந்து தங்கியவர் ஆவார்கள். இவர் களைப் பற்றிப் பல தமிழ் நூல்களில் காணலாம். அரக்கர் சிலர், பழமொழிகள் அடங்கிய பெரியபெரிய கதைகளும் விடுகதைகளும் ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொள்கின்றனராம்: