பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 'மூதுரைப் பெருங் கதைகளும் பிதிர்களும் மொழிவார்' (137). (மூதுரை = பழமொழி. பிதிர்கள்- விடுகதைகள் (வெடி) அனுமன், கணிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன்’ (144). என்று குறிப்பிடப்பட்டுள்ளான். ஞாயிறை இராகு விழுங்கும் போது, அது கனி போன்று தெரிய, அதைப் பெற அனுமன் தொடர்ந்து சென்றானாம். இராகு அனுமனால் ஏற்படும் தொல்லையை இந்திரனிடம் முறையிட்டானாம். இந்திரன் தன் வச்சிரப் படையால் அனுமனின் கன்னத்தை அடித்து, முரித்தானாம். குரங்குகட்குக் கன்னம் குவிந்து பள்ளமா யிருப்பதைக் காணலாம் அனு என்றால் கன்னம்; அனு. முரிந்ததால் அனுமான் எனப்பட்டானாம். அனுமன், காற்றுக் கடவுளுக்கும் (வாயு பகவானுக்கும்) அஞ்சனை என்பாளுக்கும் பிறந்தவன் எனப் பல இடங் களில் கூறப்பட்டிருக்கிறான். புஞ்சிகஸ்தலை என்னும் தேவமாது அஞ்சனை என்னும் வானரப் பெண்ணாக மாறியதாகப் புராண வரலாறு கூறுகிறது. சுக்கிரீவன் சூரியன் மகனாகக் கூறப்பட்டுள்ளான். மண்டோதரி மயன் மகள் எனப் பல இடங்களில் கூறப்பட்டுள்ளாள். மயன் அரக்கர் தச்சன் எனவும் தெய்வத் தச்சன் எனவும் இரண்டு விதமாகக் கூறப்படு: கிறான். மன்மதன் மீன் கொடி உடையவன் என்பதைக் கம்பர் 'மீன் உயர்த்தவன்' (199) என்னும் தொடரால் குறிப்பிட்டு அறிவித்துள்ளார். கழுகுகளின் தலைவன் சம்பாதி என்பவனாம். இவன் சடாயுவின் தமையனாவான். 'எருவைக்கு முதல் ஆய சம்பாதி' (230) என்பது பாடல் பகுதி.