பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 "வெவ்விராதனை மேவருந் தீவினை வவ்வி மாற்றருஞ் சாபமும் மாற்றிய அவ்விராமனை உன்னித் தன் ஆருயிர் செவ்விராது உணர்வோய்ந்து உடல் தேம்புவாள்' - (காட்சிப் படலம்-29). இப்பாடலில் விரா தனது வரலாறு குறிப்பிடப் பட்டுள்ளது. விராதன் தேவர் உலகத்தில் வீணை வாசிக்கும் ஒரு தும்புருவன். இவன் அரம்பையிடம் அளவு மீறிக் காமாம் கொண்டதால், அரக்கனாய்ப் பிறக்கும்படி தேவர்கள் கெடுமொழி (சாபம்) இட்டனர். இவன் காட்டிற்கு வந்து கிலிஞ்சன் என்பவனின் மகனாய்ப் பிறந்து அரக்கர் உருவம கொண்டிருந்தான். இராம இலக்குமணர் காட்டிற்கு வந்தபோது அவர்களோடு இவன் மோதியதால், இவன் அவர்களால் தன் கைகள் வெட்டப்பட்டு, கெடுமொழி விலக்கு (சாப விமோசனம்) பெற்று மீண்டும் தேவனாகித் தேவர் உலகம் சேர்ந்தான். தன் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்திய இராவணனை நோக்கிச் சீதை கூறுகின்றாள்: இராம. இலக்குமணரை எளிய-சாதாரணமான மானிடர்கள் தாமே என்று மட்டமாகக் கருதிவிட்டாயா? உன்னை வென்ற கார்த்த வீரியனை வென்ற பரசுராமன் ஒரு மனிதனே என்பதை நினைவில் கொள்க. மற்றும், தன் ஆயிரம் கைகளால் உன் இருபது கைகளையும் பற்றி இழுத்து, உன் வாயில் குருதி செரியக் குத்தி உன்னைச் சிறையில் இட்ட கார்த்த வீரியனின் ஆயிரம் தோள்களையும் வெட்டிக் கொன்ற அந்தப் பரசுராமனையே வென்றவர் இராமர் என்பதையும் நினைவு செய்து கொள்க' என்று. (காட்சிப் படலம்