பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மேலும் சீதை இராவணனுக்குக் கூறுகிறாள்: இரணியாட்சன், இரணிய கசிபு முதலிய அரக்கர்கள் தகாதனபிற செய்யினும், பிறர் மனைவியை விரும்பவில்லை. 'பொற்கணான், தம்பி என்றினைய போர்த் தொழில் விற்கொள் நாண்பொருத்தோள் அவுணர் வேறுளார் நற்கணர் நல்லறம் துறந்த நாளினும் இற்கணார் சிறந்திலர் இறந்து நீங்கினார்' (125) பொற்கணான் (பொன்கண்ணான்) என்பது, இரணி யாட்சன் என்னும் வடமொழிப் பெயரின் மொழி பெயர்ப் பாகும். (இரணியம்-பொன்-அட்சன்-கண்ணை உடையவன்) இவன் தம்பி இரணிய கசிபு என்பவன். சிலர் இரணிய கசிபு தான் இரணியன்; இவனே மூத்தவன்; இவன் தம்பிதான் இரணியாட்சன் என்பர். இரணியாட்சன் தேவர்க்கும் முனிவர்க்கும் தொல்லை தந்தான். ஒரு முறை பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு கடலுள் மறைந்து கொண்டான். உடனே திருமால் பன்றி உருவம் (வராகாவதாரம்) கொண்டு கொம்பால் இவன் மார்பைப் பிளந்து கொன்று, மீண்டும் பூமியைப் பழைய நிலையில் இருத்தினராம். இரணிய கசிபு என்னும் இரணியன், தன் மகன் பிரகலாதனைத் துன்புறுத்த, திருமால் நரசிம்ம உருவம் (நரசிம்மாவதாரம்) கொண்டு இவன் உடலைக் கிழித்தும் கொன்றார். இவ்விருவரும் காசிபருக்கும் திதி என்பாளுக்கும் பிறத்தவர் களாம். நரசிங்கப் புராணத்தில் உள்ளது இவ்வரலாறு. இரணியனைத் திருமால் நரசிம்ம உருக்கொண்டு கொன்றதைக் கம்பர் தம் பாடலிலும் குறிப்பிட்டுள்ளார் : 'முழைகொள் மேருவின் முகட்டிடைக் கனகனை முருக்கிய முரண் சீயம்' (ஊர்தேடு படலம்-205)