பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 (கனகம் = பொன்; கனகன் = இரணியன்) இரணியன் மேரு மலைப் பகுதியில் அரசாண்டிருந்ததாக இப்பாடல் குறிப்பு தருகிறது. மற்றும் ஒரு பாடலில், இரணியனின் உடலைக் கை நகங்களால் திருமால் கிழித்துப் பிளந்தார் என்ற குறிப்பு உள்ளது: 'கைச் செறி முகிழ் உகிர், கனகன் என்பவன் வச்சிர யாக்கையை வகிர்ந்த வன்தொழில்...' (உருக்காட்டு படலம்-48) சடாயு இராமனுக்குத் தந்தை முறை கொண்டாடப் பட்டுள்ளான். வழியில் இராமன் அடிபட்டுக் கிடக்கும் சடாயுவைக் கண்டு, தந்தையே! நடந்ததைக் கூறுக’ என்று கேட்டான். 'எந்தை நீ உற்ற தன்மை இயம்பு' (உருக்காட்டு படலம்-79) என்பது பாடல் பகுதி. இராவணன் சடாயுவை வீழ்த்திய கொடுமையைக் கேட்டதும். இராமன் மிகவும் சினம் கொண்டான். இராமனைத் தந்தையாகிய சடாயு ஆறுதல் கொள்ளச் செய்தான். 'தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி” (80) என்பது பாடல் பகுதி, சீதை, இராமனிடம் கூறுமாறு சில அடையாளச் செய்தி களை அனுமனிடம் கூறுகிறாள் : "நாங்கள் சித் திர கூட மலைப்பகுதியில் இருந்த போது, இந்திரன் மகன் சயந்தன், காகமாக வந்து, தன் நகங்களால் என் மார்பகத்தைக் கீறிய போது, இராமர் அருகில் கிடந்த ஒரு புல்லால் அவனைத் தாக்கி விரட்டியதை நினைவு செய்' என்று. 'நாகம் ஒன்றிய நல்வரையின் தலை மேனாள் ஆகம் வந்தெனை வள் உகிர் வாளின் அளைந்த காகம் ஒன்றை முனிந்து அயல் கல்எழு புல்லால் வேக வெம்படை விட்டது மெல்ல விரிப்பாய்' (சூடாமணிப் படலம்-77