பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இந்தத் தாக்குதலில் காகத்தின் ஒரு கண் கெட்டுவிட்ட தாசவும், காகமாகிய சயந்தன் பல தெய்வங்களிடம் சென்று முறையிட்டும் பயனில்லை என்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது. இரணியாட்சன் உலகைப் பாயாகச் சுருட்டிக் கடலில் ஒளிந்து கொண்டபோது, திருமால் ஏனமாக (பன்றியாக வந்து) கொம்பால் அவன் மார்பைப் பிளந்து, உலகைத் தன் கொம்பிலே ஏந்தி வந்து பழைய நிலையில் இருத்தின வரலாறு கம்பராலும் கூறப்பட்டுள்ளது. 'அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான்' (பொழில் இறுத்த படலம்-8). மூவுலகும் அழியும் ஊழிக் காலத்தில், திருமால் ஆலம் இலையில் வீற்றிருப்பாராம் : - 'மும்முறை உலகமெல்லாம் முற்றுற முடிவ தான அம்முறை ஐயன் வைகும் ஆல்என நின்றதம்மா' (44) முருகன் சூரபத்மனை வென்றவன்; மயிலை ஊர்தியாக உடையவன்-என்ற செய்தி. 'சூர் தடிந்தவன் மயிலிடைப் பறித்தவன் தோகை" (பஞ்ச சேனாதிபதிகள் வதைப்படலம்-17) என்னும் பாடல் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. - தேவர்கள் அமிழ்தம் பெற, மந்தர மலையை மத்தாகக் கடலில் இட்டு, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றி இழுத்துக் கடைந்த செய்தி, "...செறி கயிற்று அரவினால் திரி அருந்திறல் மந்தரம் அனையர் ஆயினார்'(41) என்னும் பாடல் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமால் வாமன உருவம் (வாமனாவதாரம்) எடுத்து மூன்று உலகங்களையும் தன் அடியால் அளந்து பலி