பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 என்னும் மாவலியைக் கொன்ற வரலாறு, "மூன்று உலகு. அடியின் தாயோன்’ (அக்க குமாரன் வதைப்படலம்-2) என்னும் பாடல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராவணன் பிரமனுடைய மகனுக்கு மகனுக்கு மகனாம் அதாவது, பிரமனின் கொள்ளுப் பேரனாம். இளைய மகன் அக்ககுமாரன் இறந்த துயர் பெறாமல், மயன் மகளாகிய மண்டோதரி, பிரமனின் கோள்ளுப் பேரனும் தன் கணவனும் ஆகிய இராவணனின் காலடியில் விழுந்து அழுதாளாம் : 'அயன் மகன் மகன் மகன் அடியில் வீழ்ந்தனள். மயன்மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள்'(48) அனுமனுடன் போர் புரிந்து மாண்ட அக்க குமாரனின் உடல் குருதி வெள்ளத்தில் கிடக்கிறது. ஆதற்குக் கம்பர் இரண்டு உவமைகள் கூறியுள்ளார். முருகனால் கொல்லப் பட்ட தாருகா சூரனது குருதி போன்ற குருதியில் கிடந்தா னாம். திருமால் நரசிம்மமாய் வந்து நகத்தால் கிழித்துக் கொன்ற இரணியனது உடல் போல் அவன் உடல் குழம்பிக் கிடந்ததாம்: 'தாருகன் குருதியன்ன குருதியில், தனிமாச் சீயம் கூருகிர் கிளைத்த கொற்றக் கனகன் மெய்க்குழம்பின் தோன்ற' (பாசப்படலம் 20) சூரபத்மனின் இளைய தம்பியும், முருகனால் கொல்லப் பட்டவனுமாகிய தாருகா சூரன் இப்பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளான் . சிவன் மேரு மலையை வில்லாக வளைத்து, வாசுகிப் பாம்பை நாணாகப் பூட்டி, திருமாலை அம்பாகக் கொண்டு, தாராட்சன்- கமலாட்சன்- வித்வன் மாலி- என்னும் அரக்கர் மூவரின் பொன் கோட்டை-வெள்ளிக்கோட்டை