பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 ஏதேனும் ஒரு நூல் சொல்லுகின்ற ஒரு சிறு குறிப்பை யாயினும் இங்கே காணவேண்டுமல்லவா? திவாகர் இயற்றிய சேந்தன் திவாகரம்’ என்னும் நிகண்டு நூல் உள்ளது. அந்நூலுள் விலங்கினப் பெயர்த் தொகுதி' என்னும் பகுதி ஒன்று உள்ளது. இது அஃறிணை உயிர்களைப் பற்றிச் சொல்லும் பகுதியாகும். இந்நூலுள் திமிங்கிலகிலம் பற்றிச் சொல்லும் பகுதியைக் காணலாம்: 'மெலிய வரை வலியவர் வாட்டினால், வலிய வரைத் தெய்வம் வாட்டும் என்னும் மொழிப்படி, சிறு மீனைப் பெரிய மீன் விழுங்கின், பெரு மீனைத் திமிங்கிலம் விழுங்கும் என்று மக்கள் கூறுவதுண்டு. சிறு மீனை விழுங்கும் அந்தப் பெரிய மீனுக்கு யானை மீன், திமி என்னும் பெயர்கள் உண்டு. யானை மீனை விழுங்கும் மீனுக்குத் திமிங்கிலம் என்று பெயராம். திமிங்கிலத்தை விழுங்கும் மீனுக்குத் திமிங்கிலகிலம் என்று பெயராம். இந்த விவரங்களைச் சேந்தன் திவாகரம்- விலங்கினப் பெயர்த் தொகுதியில் உள்ள பின்வரும் நூற்பாக்களால் அறியலாம்: (பெரு மீனின் பெயர்) 'யானை மீன். திமி, பெருமீன் ஆகும்.” (யானை மீனை விழுங்கும் மீன்) 'யானையை விழுங்கு மீன் திமிங்கிலம் என்ப. (திமிங்கிலத்தை விழுங்கும் மீன்) 'அம்மீனை விழுங்கும் மீன் திமிங்கிலகிலமே." கப்பலில்- ஒடங்களில் செல்பவர்கள், நடுக்கடலில் படுத்துக் கிடக்கும் திமிங்கிலத்தை ஒரு தீவு என்று கருதி அதன் மீது இறங்குவதும் உணவு சமைப்பதும் உண்டு; தீ மூண்டதும் திமிங்கிலம் அசைந்து கொடுக்க, உடனே அனைவரும் கப்பலில் ஏறிக் கொள்வர்- என்பதாக மக்கள் பேசிக் கொள்வதுண்டு.