பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கிழக்குக் கடற்கரை யோரம் இருப்பவர்கட்கு ஞாயிறு கீழ்க்கடலில் தோன்றுவதாகவும்,மேற்குக் கடற்கரை யோரம் இருப்பவர்கட்கு ஞாயிறு மேல்கடலில் மறைவதாகவும் புலப்படும். ஆனால் இடையில் உள்ளவர்கட்கு எவ்வாறு புலப்படக்கூடும்? இடையிலே கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன. இவையன்றி, இடையில்ஆங்காங்கே சிறு சிறு குன்றுகளும் ஓரளவு பெரிய தனித் தனி மலைகளும் உள்ளன. எந்தமலையோ-மலையின் மேற்கே இருப்பவர்க்கு ஞாயிறு கிழக்குமலையில் (உதயகிரியில்) தோன்றுவதாகவும், மலையின் கிழக்கே இருப்பவர்க்கு ஞாயிறு மேற்கு மலையில் (அஸ்தகிரியில்) மறைவதாகவும் தெரியும். இந்த அடிப்படையில்தான் உதயகிரியும் அஸ்தகிரியும் இப்பெயர்களைப் பெற்றன. பழைய இலக்கிய ஆசிரியர்களுள் கீழ்க்கடலையும் மேல் கடலையும் அறியாதவர்கள் மலைகளில் ஞாயிறு தோன்றுவ தாகவம் மறைவதாகவும் கூறினர். இன்றும் கடல் பார்க்காத மக்கள் உண்டு. நாளடைவில் பல்வேறிடங்களிலும் இருந்த மக்கள் போக்குவரவு வசதி பெற்று ஒன்று கூடும் வாய்ப்பைப் பெற்றனர். ஆயினும் அவரவர்கள் எழுதிய-கீழ்க்கடல் தோற்றமும் மேல்கடல் மறைவும், உதயகிரித் தோற்றமும் அத்தகிரி மறைவும் கொண்ட நூல்கள் பலராலும் படிக்கப் பட்டு, ஞாயிற்றின் தோற்றத்திலும் மறைவிலும் குழப்பம் உண்டாக்கின. உண்மைநிலை இதுதான், எனவே, கம்பர் பாடல்களிலும் இக்குழப்பம் உள்ளமை வியப்பன்று. புரசமரம் பங்குனித் திங்களில் பூக்குமாம் :பங்குனி மலர்ந்தொளிர் பலாசவனம் ஒப்பார்' (68) (பலாசம்-புரசமரம்; செம்முருக்கு என்பதும் உண்டு.) ஞாயிறை இராகுகேதுவாகிய பாம்பு பற்றும் ஞாயிறு பிடிப்பு (சூரிய கிரகணம்) கம்பரால் குறிப்பிடப்பட்டுள்ளது.