பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 'சுடரோனைக்காணா வந்த கட்செவி என்ன' (73) இலங்கை மாதேவி அனுமனைத் தடுத்தற்கு இவ்வுவமை கூறப்பட்டுள்ளது. இலங்கை மகளிர், யாழிசை இலக்கணப்படி, குரல்துத்தம் - கைக்கிளை - உழை - இளி -விளரி-தாரம்என்னும் எழுவகைச் சுருதிகளை இசைக்கக் கூடிய ஏழு நரம்புகளை மீட்டித் தாளத்திற்கு ஏற்ப அளவு செய்து பாடல் இசைத்தனராம்: "இலக்கண மரபிற்கு ஏற்ற எழுவகை நரம்பின் நல்யாழ் அலத்தகத் தளிர்க்கை நோவ அளந்தெடுத்து அமைந்த பாடல் (103) இப்பாடலால் கம்பரின் இசைப் புலமை புலப்படும். தமிழ் இசைக்கு ஏற்ற இலக்கண நூல் தமிழில் இருந்தமை ஆயும் புலனாகும். விநாயகரை, ஐந்து கைகளையுடைய யானை முகத்தோன் என்னும் பொருளில் ஐங்கரக்களிறு என்று கம்பர் கூறியுள்ளார். அனுமன் இலங்கையில் பல இடங்கட்கும் சென்று சீதையைத் தேடினானாம்: 'மாட கூடங்கள் மாளிகை ஒளிகை, மகளிர் ஆடு அரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள் பாடல் வேதிகை பட்டிமண்டபம் முதல் பலவும் நாடி ஏகினன் இராகவன் புகழெனும் நலத்தான்' (131) அனுமன் தேடிய இடங்களில் பட்டிமண்டபமும் ஒன்று. இக்காலத்தில் பட்டி மண்டபம் இல்லாத சொற் பொழிவு விழாக்கள் இல்லை எனலாம். பட்டி மண்டபம் பேச்சாளர் பலர்க்குப் பணமும் தருகிறது. பட்டிமண்டபம் பல நூல் களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்ப இராமாயணம்