பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நகரப் படலத்தில் 'பன்னருங் கலை தெரி பட்டிமண்டபம்" (62) என்றும், சிலப்பதிகாரத்தில் "பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டமும்' (5-102) எ ன் று ம், மணிமேகலையில் "பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்,' (1-( ) எ ன் று ம், திருவாசகத்தில் பட்டிமண்டபம் ஏற்றினை’ (திருச்சதகம்-49) என்றும். கூறியிருக்கும் பகுதிகள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. சிலர் பட்டிமண்டப நிகழ்ச்சியை மட்டமாகக் கருதி அடி யோடு வெறுத்துத் துற்றுகின்றனர். ஆனால், அரக்கர் களின் இலங்கையிலேயே பட்டிமண்டபம் இருந்திருக்கிறது. போலும்! - மிக்க விரைவைக் குறிக்க மான் வேகம்-மழுவேகம் என்பர் மான் மிகவும் விரைவாக ஒடும். மழு என்பது: சிவனது எரியும் இரும்புப்படை, இதுவும் விரைவாகச் செல்லும் போலும்! அடுத்து, மனோ வேகம்-வாயுவேகம் என்பர். காற்று (வாயு)-சூறாவளிக் காற்று மிகவும் விரை வாக அடிக்கும். மின் ஒளி ஒரு விநாடிக்கு 1,80,000 கல் (மைல்) தொலைவு செல்லுமாம். எல்லாவற்றினும் மனமே மிகவும் விரைவாகச் செல்லும். அமெரிக்க-ஐரோப்பாஆப்பிரிக்கா - சிவலோகம் - வைகுண்டம் - என மிக விரைவில் உடனுக்குடன் - இடைவெளியின்றிச் செல்லக் கூடியது மனமே அனுமன் தன் மனத்திற்கும் முன்னால்விரைவாகச் சென்றானாம். தன் மனத்தின் முன் செல்வான்' (136) என்பது கம்பரின் பாடல் பகுதி. அகழிகள் மூன்று உண்டு என்றும், அவற்றுள் நடு அகழியை இலங்கையல் அனுமன் கண்டான் என்றும் கூறப்பட்டுள்ளது. 'சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியைத் தொடர்ந்தான்' (143) என்பது பாடல் பகுதி. சொன்ன மூன்று என்பதற்கு வேறு விதமாகவும் பொருள் கூறலாமோ?. நகரை ஒட்டியுள்ளது மதில் அரண்; அதை அடுத்துள்ளது அகழி அரண்; அதற்கும் அப்பால் உள்ள