பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மணல் அரண்-காட்டு அரண்-மலை அரண் முதலியவை வெளி அரண்களாம் இம்மூவகை அரண்களுள் அகழி அரண் நடுவில் உள்ள தன்றோ? மற்றும், கடல் அரண்நகர் நடு அரண்-அரண்மனையைச் சுற்றியுள்ள அரண் என்னும் மூன்றும் கூறலாமே! இராவணன் கயிலை மலையின் கீழ் அகப்பட்டுக் கொண்டபோது, தன் கைகளாகிய நரம்புகளை மீட்டி நால்வகைப் பண்களைப் பாடினானாம், 'அம்கை நரம்பினால் நாடி நால் பெரும் பண்ணும் பாடினான்’ (176) நால்வகைப் பண்கள், பாலை-குறிஞ்சி-மருதம்செவ்வழி-எனச் சொல்லப்படுகின்றன. "மானிடர் என்பதைக் கம்பர் பல பாடல்களில் 'மானுயர்' என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளார், (பறைதல்) பறயுக' என்னும் சொல்லுக்கு மலையாளத் தில் சொல்லுதல் என்னும் பொருள் உண்டு. தமிழில் உள்ள 'தல் என்னும் தொழிற் பெயர் விகுதி போன்றது மலையாளத்தில் உள்ள 'உக என்னும் வி குதி. இச்சொல்லை இந்தப் பொருளில் கம்பர் ஆண்டுள்ளார். மண்டோதரி குழல் சோர்ந்து வாய்வெருவிச் சில சொற்கள் சொல்கின்றாளாம். 'மலர்க்கருங் குழல்சோர்ந்து வாய் வெரீ இச்சில மாற்றங்கள் பறைகின்ற்ாள் ' (200) இங்கே பறைகின்றாள்' எனக் கூறியிருப்பது காண் , தமிழ் என்னும் சொல்லை. குளிர்ச்சி- இனிமை என்னும் பொருளில் கம்பர் ஆ ண்டுள்ளார். தென்றல் காற்று, தண்ணிய இனிய தமிழ் போன்றதாம். தண் தமிழ்ப் பசுந்தென்றல்' (208) என்பது பாடல் கு தி.