பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 காட்சிப்படலத்தில், அகத்தியனைத் தென் தமிழ் உரைத் தோன்' (129) என்று குறிப்பிட்டுள்ளார். வடமொழி என்பதன் மறுதலை யாகத் தென் தமிழ் எனப்பட்டது. ஆரண ய காண்டத்திலும், அகத்தியனை, "என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்' (அகத்தியப் படலம்-47) என்று குறிப்பிட்டிருப்பதைக் காணலாம், உலகியலில் கூட்டம் மிக்கிருப்பதைக் குறிக்க எள் விழவும் இடம் இல்லை’ என்பது உண்டு. அதாவது, வெற்றிடம் சிறிதும் இல்லையென வெற்றிடத்தின் மிகச் சிறிய அளவை இது குறிக்கின்றது. அனுமன் இலங்கையில் எல்லா இடங்களலும் கற்றித் திரிந்து சீதையைத் தேடினா னாம். எள் விழும் சிறிய இடங்கூட அவன் போகாமல் விட வில்லையாம். இதனை எள் உறையும் ஒழியாமல்' (232) என்னும் பாடல் பகுதியில் கம்பர் அறிவித்துள்ளார். (காட்சிப் படலம்) கால அளவைக் குறிக்க இப்போது இத்தனை மணி அத்தனை மணி- என மணி என்னும் சொல்லைப் பயன் படுத்துவது போலப் பண்டு நாழிகை, கன்னல் முதலிய சொற்களைப் பயன்படுத்தினர். இராமன், காட்டில், கரன் -து டணன் முதலியோர் உள்ளிட்ட பதினாலாயிரம் படை யை மூன்று கன்னல் நேரத்தில் வென்றானாம். இதை எண்ணிச் சீதை வெம்புகின்றாள் : ‘இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய பன்னலம் பதினா லாயிரம் படை க ைனல் மூன்றில் களப்படக் கால்வளை வில்நலம் புகழ்ந் தேங்கி வெதும்புவாள்' (22) - இரண்டரை நாழிகை கொண்டது ஒரு மணி(60) நிமிடம் என இப்போது கணக்கிடுகின்றனர். கன்னல் என்பதற்கு நாழிகை என்று பொருள் கொள்ளின், கன்னல் மூன்று.