பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 2. காட்டில் சூர்ப்பண்கை இரமானிடம், தான் ஆபிரமனின் கொள்ளுப் பேர்த்தி- அந்தண வகுப்பினள் எனக் கூறியமை. 'பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி' (சூர்பணகைப்படலம்-32) என்பது பாடல் பகுதி. 3. இராமன் சூர்ப்பணகையை நோக்கி, பெண்ணே! உன் குலமும் என் குலமும் ஒத்து வராது; நீ அந்தணர் குலத்தினள்; யானோ அரசர் குலத்தினன்' என்றான். "சுந்தரி, மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்; அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன் என்றான்' (42) என்பது பாடல் பகுதி. 4. பின் சூர்ப்பனகை, இராமனை நோக்கி, 'என் தந்தை வேதம் ஒதும் மறையவர் குலத்தினன்' என்றாள். 'ஆரண மறையோன் எந்தை' (43) என்பது பாடல் பகுதி. - 5. காட்சிப் படலத்தில், இராவணனுக்கு இணங்கு மாறு அரக்கியர் சீதையை வற்புறுத்தியபோது, அவன் நான்முகன் மகனின் பேரன்-ஆயிரம் வேதம் வல்லவன்’ என்று அறிவுறுத்தினராம். 'வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன், ஐயன், வேதம் ஆயிரம் வல்லான்...' (149) 6. அக்ககுமாரன் வதைப் படலத்திலும் இராவணன் பிரமனின் கொள்ளுப்பேரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, 'அயன் மகன் மகன் மகன்' (48) என்பது பாடல் பகுதி. அயன் மகன் புலத்தியன்-புலத்தியன் மகன் விச்சிரவசு-விச்சுர வசுவின் மகன் இராவணன் .