பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இவ்வாறு உள்ளவை சிலவற்றைச் சான்றாகக் காட்டி, இராவணன் ஆரியன் என்று சிலர் கூறுவர். இராவணன் அரக்கன் என்றும் சொல்லப்படுகிறான். ஆக, இராவணன், மனித இயல்பிற்கு அப்பாற்பட்டவன் என்பது புலனா கிறது. சூரியர் பன்னிருவர் என்பது புராணச் செய்தி. 'வெங்கதிர்ச் செல்வர் பன்னிருவரினும் (காட்சிப் படலம்-81) என்பது பாடல் பகுதி. இராகு கேதுவாகிய பாம்பு திங்களைக் கவ்வுவது. போல், அரக்கியர் சீதையைச் சுற்றியிருந்தனரர்ம். 'பொங்கு அரா நுங்கிக் கான்ற தூய வெண்மதியம் ஒத்த தோகை' (147) என்பது பாடல் பகுதி. இதில் திங்கள் பிடிப்பு' (சந்திர கிரகணம்) குறிப்பிடப்பட்டுள்ளது. வீடணன் மகள் பெயர் திரிசடை. கம்பர் முச்சடை” என்று அவளைக் குறிப்பிட்டுள்ளார். அன்ன முச்சடை என்பாள்' (153) என்பது பாடல் பகுதி. கம்பர் கூடியவரை யிலும், வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப் படுத்திக் காட்டி யுள்ளார். இரணியாட்சனைப் பொற்கணான் என மொழி பெயர்த்துள்ளார். மானிடர் என்பதை மானுயர் என்று கூறி யிருப்பது போல், தசமுகன் என்பதைத் தயமுகன் என் கிறார். இலட்சம் என்பதை இலக்கம் என்றும், அகூடின் என்பதை அக்கன் என்றும் கூறியுள்ளார். விபீஷணனை வீடணன் என்கிறார். இவ்வாறு ஒலிப்பிலும் மாறுதல் செய்துள்ளார். இத்தகைய மாற்றங்கள் பலவற்றைக் கம்ப ரிடம் காணலாம். இக்காலத்தினர்க்கு வழிகாட்டியாகமுன்னோடியாக அக்காலத்திலேயே கம்பர் விளங்கியிருக் கிறார். சிலர் இன்றும் தயங்குகின்றனரே! அனுமன் சீதையிடம் வானரப் படையின் அளவைக் கூறுகிறான்: "எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன’’