பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 யதும் ஒன்று என ஒரு கோடு போடுவர் இரண்டாவது ஆயிரம் எண்ணியதும் இரண்டு கோடுகள் போடுவர். பத் தாயிரம் எண்ணியதும் பத்துக்கோடுகளோ-பத்து என்னும் எண்ணோ போட்டு வைப்பர். நூறாவது ஆயிரம் எண்ணி யதும் நூறு கோடுகள் போடாவிடினும் 100 என்னும் எண்ணையிட்டு வைப்பர். இந்தச் சிறு சிறு குறியீடுகளைக் கொண்டு, எத்தனை யாவது ஆயிரம்-எத்தனையாவது ஆயிரம்-என அறிந்து கொள்ளலாம், இவ்வாறு சிறு குறியிடுவதற்குத்தான் உறை யிடுதல் என்று பெயராம். மிகப் பரந்த அளவில் உள்ள பெரிய வானரப் படைகளை எண்ணுவதற்கு, அரக்கர் படை, ஒன்று-இரண்டு-நூறு எனச் சிறு குறியீடு போட வும் காண முடியாது என்பது கருத்தாகும். இந்தக் குறியிடுதல் என்னும் பொருளில், உறையிடுதல் என்பது , பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய திருவேங்கடத் தந்தாதி என்னும் நூல் பாடல் (34) ஒன்றிலும் கூறப் பட்டுள்ளது. 'முறையிடத் தேவர் இலங்கை செற்றான், முதுவேங்கடத்துள் இறை, இடத்தே சங்குடையான், இனி என்னை ஆண்டிலனேல், தரையிடத்தே உழல் எல்லாப் பிறவி . . தமக்கும் அளவு உறையிடத் தேய்ந்திடும், இவ் அந்தி வானத்து உடுக்குலமே?” என்பது பாடல், திருமால் அருளானேல், எடுத்த பிறவி களே யன்றி இன்னும் பற்பல பிறவிகள் எடுக்க வேண்டும்என்பது பாடலின் கருத்து. கோடிக் கணக்கில் பிறவிகள் எடுக்க வேண்டும். பிறவிகளின் எண்ணிக்கையை அளந்து உறையிட, விண்ணில் உள்ள விண்மீன்கள் போத,