பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அனுமன் அசோகவனத்தை அழித்தபோது, பன்மணி பதித்து அணிசெய்த மரங்கள் வானளவிச் சென்று, இந்திரவில் போன்ற ஒளி யுண்டாக்கி வானவிமானம் போல் வானத்தில் மிதந்தனவாம்: 'தேனுறை துளிப்ப, நிறைபுள் பல சிலம்ப, பூநிறை மணித்தரு விசும்பி னிடைபோவ, மீன்முறை நெருக்க, ஒளி வாளொடு வில் வீச, வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன' (பொழில் சிறுத்த படலம்-21). வானவில்லும் (Rainbow) வான ஊர்தியும் இப்பாடலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கம்பர் கண்ட வான ஊர்தி என்னவாயிருந்ததோ-தெரியவில்லை. மற்றொரு பாடலில் இந்திரவில் புனையப்பட்டுள்ளது. அனுமனால் எறியப்பட்ட ஒளியுள்ள மரங்கள், வானில் இரவில் இந்திரவில் போல் தோன்றின. இவ்வாறு இரவில் வானவில் தோன்றுவது, அரக்கர்கள் அழிவர் என்பதைக் காட்டும் தீய நிமித்தமாகும். "புல்லும் பொன்பணைப் பல்மணிப் பொன்மரம் சொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால் எல்லில் இட்டு விளக்கிய இந்திரன் வில்லும் ஒத்தன; விண் உற வீசின’’ - (36) திங்களை விண்மீன்களின் தலைவன் எனக் கம்பர் கூறியுள்ளார். உடுவின் கோமான்' (40) என்பது பாடல் பகுதி. திங்கள் ஞாயிற்றின் ஒளி பெற்றுப் பூமியைச் சுற்றும் ஒரு சிறிய துணைக்கோள் ஆகும். விண்மீன்களோ, வெகு தொலைவில் இருப்பதால் ஒவ்வொன்றும் சிறியனவாகத் தெரியினும், உண்மையில் ஞாயிறு போன்ற பெரிய கோள் களாகும். இந்த வான இயல் உண்மை, அந்தக் காலத்தில் கம்பருக்குத் தெரியாமற் போனதில் வியப்பில்லை."