பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 "ஆயிரம் ஐந்தோடைந்தாம் ஆழியந் தடந்தேர்; அத்தேர்க்கு ஏயின இரட்டியானை, யானையின் இரட்டி பாய்மா; போயின பதாதி சொன்ன புரவியின் இரட்டி போலாம். தீயவன் தடந்தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற சேனை’’ (சம்புமாலி வதைப் படலம்-10) தமிழகத்தில் வள்ளுவர் ஆனைமேல் அமர்ந்து முரசு அறைவதைக் கம்பர் இலங்கையிலும் நடந்ததாகக் கூறி யுள்ளார்: .' 'ஆனைமேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார்' (பஞ்ச சேனாதிபதிகள் வதைப் படலம்-6) இலங்கை வெல்லப்பட்டதும், புறப்படுமாறு முரசு அறைந்து தெரிவிக்கும்படி வள்ளுவரைச் சுக்கிரீவன் முடுக்கினானாம்: "எங்கும் முழுமுரசு எற்றிக் கொற்ற வள்ளுவர் முடுக்க." 孕 . (திருவடி தொழுத படலம்-50) என, இரண்டிடங்களில், வள்ளுவர் முரசறைவது கூறப் பட்டுள்ளது. . அரக்கரை வீழ்த்திய அனுமன், ஆம்பல் மலரின் பகைவனாகிய ஞாயிறுபோல் விளங்கினானாம்: பாம்பென நீங்கினர், பட்ட்னர் வீழ்ந்தார்; ஆம்பல் நெடும்பகை போல் அவன் நின்றான்' (பஞ்சசேனாதிபதிகள் வதைப் படலம்-61) திங்கள் தோன்றின் தாமரை குவிகிறது-ஆம்பல் மலர் கிறது. ஞாயிறு தோன்றின் தாமரை மலர்கிறது-ஆம்பல் குவிகிறது. அதனால், பிங்கல முனிவர் தம் பிங்கல நிகண்டில் திங்களைக் குமுதசகாயன்' என்றும், மண்டல