பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. சிலர் கூறுவர். தாலி அறுக்கும் நிகழ்ச்சி மங்கலம் இல்லாத நிகழ்ச்சி. அதையும் தாலி அறுத்தல்' என்று குறிப்பிடின் மங்கலம் இன்மைக்கு மேலும் மங்கலம் இல்லாத நிகழ்ச்சி யாகும். எனவே தாலி வாங்குதல்' என்பது நாகரிகமான ஒரு வழக்காறு, கம்பரும் தாலி வாங்குதல்' என்றே. கூறியுள்ளார்: - - 'திரு வாங்கலாம் என்று அழும் மாதரார் பலர்' (5): இங்கே திரு என்பது தாலியாகும். தாலியைத் திருநாண், திருமங்கல நாண் என்றெல்லாம் குறிப்பிடுவ துண்டு மகளிர்க்குத் தாலியே பெருஞ்செல்வம் என்பதைத் 'திரு” என்பது அறிவிக்கிறது. கம்பர் அமைச்சர்களை (மந்திரிகளை) மந்திரத்து, அளவறு முதியரும் (20) என அகவை முதிர்ந்தவர்களாகக் குறிப்பிட்டிருப்பது எண்ணத் தக்கது. மற்றும், சீதையை ‘மிதிலை நாடி (20) என று குறிப்பிட்டுள்ளார். ‘மிதிலை. நாடன்” என்னும் ஆண்பாலுக்கு நேரான பெண்பால் ‘மிதிலை நாடி’ என பது. சீதை மிதிலை நாட்டாள் ஆதலின், அவளை ‘மிதிலை நாடி’ எனக் கம்பர் குறிப்பிட் டிருப்பது சுவையாய் உளளது. மிதிலை நாடி என்பதன் சுருக்கம மைதிலி' என்பது. மிதிலையில் பிறந்தவள் மைதிலி. - வெகு விரைவில் என்னும் பொருளில் ‘ஏ’ எனாமுன் (113) என வும், 'ஏ' எனும் அளவில் (திருவடி தொழுத படலம்-90) எனவும், ஏ’ என்னும் ஒலிக் குறிப்பைக் கமபர் பயன்படுததியுள்ளார். "ஆம்" என்பதற்குள், ஊம் என்ப தற்குள - என்றெல்லாம மக்கள் கூறுவதுண்டு. அம்’ என னும அளவில் ஆயிரம் பாடல்களும், இம்' என்னும் அளவல ஈராயிரம் பாடல்களும் பாடுவார் என்றெல்லாம். சொலலும் வழக்கு உண்டு. -