பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ராயிற்றே! தொல்காப்பியம்- பொருளதிகாரம்- புறத் திணையியலில், "கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்" (12-1): என்பதாக ஒரு கொற்றம் கூறப்பட்டுள்ளது. இதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர், ... < "பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னே யும் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றியும்- கழிந்தது பொழிந்தென என்னும் புறப்பாட்டும்....... ஆனா ஈகை அடுபோர் என்னும் புறப் பாட்டும் அது. இராமன் இலங்கை கொள்வதன் முன் விட ண ற்குக் கொடுத்த துறையும் அது' என்று இலக்கிய மேற்கோள்களுடன் உரை எழுதி யுள்ளார். புறப்பாட்டு என்பது புற நானூறு. அவர் காட்டியுள்ள "கழிந்தது பொழிந்தென' (203) என்னும் தொடங்கும் புறநானூற்றுப் பாடல், 'சேரமான் பாமு, ளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி' என்னும் சோழ மன்னனைப் பற்றி, ஊன் பொதி பசுங், குடையார்' என்னும் புலவர் பாடியது. பகைவரது கோட்டை அவரிடம் இருக்கும்போதேஅதை நீ வெல்வதற்கு முன்பே, பாணர்க்குப் பரிசாகக் கொடுக்கும் வள்ளன்மை உடையவன் நீ! -என்று புலவர் சோழனை நோக்கிக் கூறியுள்ளார்: 'ஒன்னார் ஆரெயில் அவர்கட் டாகவும் நுமதெனப் பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்” (203:9-11.). என்பது பாடல் பகுதி, அடுத்து ஆனா ஈகை அடுபோர்’ (42) என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை'க் கோவூர் கிழார் பாடியது: