பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 சோழ மன்னா! புலவர்கள் உதவி வேண்டி உன்னை நோக்கினர். நீயோ (அவர்கட்குக் கொடுத்து விட்டதான பொருளில்) சேரர் நாட்டையும் பாண்டியர் நாட்டையும் நோக்கினாய்!” என்று புலவர் கூறியுள்ளார். 'புலவ ரெல்லாம் நின் நோக் கினரே மாற்றிரு வேந்தர் மண்ணோக்கினையே’ (42, 21-24) என்பது பாடல் பகுதி. மற்றும், மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சி என்னும் நூலில் உள்ளட 'அரிய எல்லாம் எளிதினில் கொண்டு உரிய எல்லாம் ஒம்பாது வீசி'- (145, 146) என்னும் பகுதிக்குப் பின்வருமாறு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்: 'பிறர்க்கு அரிய நுகர் பொருள்கள் எல்லாம் எளிதாக நின் ஊரிடத்தேயிருந்து மனத்தால் கைக்கொண்டு, அப்பொருளையெல்லாம் நினக்கென்று பாதுகாவாது ஊரிடத்தேயிருந்து பிறர்க்குக் கொடுத்து-' என்பது உரைப் பகுதி. (சிலர் பிறர் பொருள்களை அவர்கள் கொடுக்காமலேயே தாங்களாகவே திருடிக் கொள்கிறார்களே- அவர்களும் தொல்காப்பியத்தையும் கழக இலக்கியங்களையும் பின்பற்றுகின்றனரோஅந்தோ!) கம்பர் மேற்கூறிய பாடல்களையெல்லாம் படித்தவ ராதலின், அந்தக் கருத்தைத் தம் பாடலிலும் புகுத்தி யுள்ளார் போலும்! இது சிறந்ததொரு கருத்தாளுமை யன்றோ! நச்சினார்க்கினியர் இராமன் செயலை எடுத்துக் காட்டியிருப்பதைக் கொண்டு, கம்பராமாயணம் புலவர் பலராலும் பெரிதும் பயிலப்பட்டு வந்துளது என்னும் உண்மை புலனாகும்.