பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 அந்தத் துணை காம ஆசை தான். 'ஆசையும் தாமுமே ஆய்'-பாடல் பகுதி. (ஊ.178) புலவர் சிலர் தயிருக்குப் பனிக்காலத்து நிலவை ஒப்புமையாகக் கூறியுள்ளனர். அந்தத் தயிரைக் கள்ளின் நிறத்துக்கு ஒப்புமையாகக் கம்பர் கூறியுள்ளார். 'தயிர் நிறத்து உறுகள்'-188. மேலோராயினும் கீழோரிடம் அகப்பட்டுக் கொள்ளின் தீமை வருமா-நன்மை வருமா என்று கூற முடியாது. இவ்வாறு தென்றல் காற்று அரக்கியரிடம் அகப்பட்டுக் கொண்டு, அவர்கள் வா என்றால் வருவதும் போ என்றால் போவதுமாக ஊஞ்சல் போல உலவிற்றாம். 'விழைவு நீங்கிய மேன்மைய ராயினும் கீழ்மையர் வெகுள் வுற்றால் பிழைகொல் நன்மைகொல் பெறுவது என்றையுறு பீழையால் பெருந்தென்றல் உழையர் கூவப்புக்கு, ஏகுஎனப் பெயர்வதோர் ஊசலின் உளதாகும்' (ஊ196) தென்றலைப் பற்றிப் புலவர்கள் பலர் பல விதமாகப் பாடியுள்ளனர். இது கம்பரின் கூற்று. திங்களுக்குப் பதினாறு கலைகள் உள்ளதாகக் கூறுவது மரபு. இக்கலைகள் நாளுக்கு நாள் ஒவ்வொன் றாய்க் குறைவதும் ஒவ்வொன்றாய்க் கூடுவதுமாகச் சொல்வர். சிவன் தலையில் சூடிக் கொண்டது ஒரே கலை தான். அதனால் அந்தக் கலைத் திங்கள், குழந்தை வெண் மதி' (207) எனக் குழந்தையாகக் கூறப்பட்டுள்ளது மயில் எவ்வளவு காம வேட்கை மிகினும, தான் இருக்கும் குன்றை விட்டுக் காதலரைத் தேடி இன்னொரு குன்றுக்குச் செல்லுதல் அரிது என்னும் ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது. அரக்கியர், இராவணனின் இருபது தோள்களுள் ஒரு தோளைத் தழுவி அடுத்தடுத்த தோள்