பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 Though winning near the goat yet do not grieve; She cannot fade, though thou had not thy bliss, For ever wilt thou love, and she be fair!” (2) இன்பூட்டும் மரக்கிளைகளே! உங்கள் இலைகள் உதிர மாட்டா. இலை தளிர்க்கும் இளவேனில் காலச் சூழ் நிலைக்கு வழியனுப்பு விழாவே (பிரிவுபசாரமே) கிடையாது; என்றும் இளவேனில் காலத்திலேயே நீங்கள் (மரங்கள்). இருக்க முடியும். மகிழ்ச்சியூட்டும் இன்னியங்கள் இசைப் பவர்கள் எப்போதும் களைப்பு இன்றி இசைத்துக் கொண்டேயிருப்பர்; இசை எப்போதும் புது இசையாகவே இருக்கும். எவ்வளவு மகிழ்ச்சியான காதல்-எவ்வளவு மகிழ்ச்சியான காதல்! காதலர்கள் என்றும் இளமையுடன் இருந்து குளிர்ந்த (warm-வெதுவெதுப்பான) காதல் சுவையை நுகர்ந்து கொண்டேயிருப்பர்; துன்பமின்றித் தெவிட்டாமல் காதலிப்பர் : * “Ah happy, happy boughs! that cannot shed Your leaves, nor ever bid the spring adien; And happy melodist, unwearied For ever piping songs for ever new; More happly love! more happy, happy love! For ever warm and still to be enjoyed, For ever panting and for ever young; All breathing human passion for above, That leaves a heart high sorrowful and cloyed A burning forehead, and a parching tongue.” (3) என்பது ஆங்கிலப்பாடலாகும். இவ்வளவு நீளப் பாடலைக் கம்பர் சித்திரத்துச் செந்தாமரை” என்னும் தொடரில் அடக்கி விட்டார். சித்திரத்துப் பொருள் எவ்வா றிருக்கும் என்பதன் விளக்கமே இந்த ஆங்கிலப் பாட லாகும். மொழி- இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும்