பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 முறையில் இந்த ஆங்கிலப் பாடல் தரப்பட்டுள்ளது. இது ஒரு சார் ஒப்புமையாகும். அசோகவனத்தில் சீதை அன்னம் போன்றிருந்தாள். அன்னம் தண்ணிரில் அல்லவா இருக்கும்? இங்கே, அவளது கண்ணிராகிய தடாகமே அன்னமாகிய அவள் இருக்கும் இடம். இந்த அமைப்பும் சுவையானது. 'கடல்துணை நெடியதன் கண்ணின் நீர்ப்பெருந் தடத்திடை இருந்ததோர் அன்னத் தன்மையாள்'(60) இராவணன், இராமனுள்ளே உள்ள உயிரை ஒளித்து வைத்துள்ளானாம். அந்த உயிர் சீதைதான்! "கள்ளவாள் அரக்கன் கமலக் கண்ணனார் உள்ளுறை உயிரினை ஒளித்து வைத்தவா?' (61) உயர் பண்புடைய குடிப்பிறப்பு என்பதும், நாணம் என்னும் மகளிர் பண்பும் தவம் செய்த்தால் சீதை தோன்றி னாளாம். அதாவது, சீதை நாணம் குன்றாமல் பிறந்த குடிப் பெருமையைக் காத்தாள். . .

  • பேன நோற்றது மனைப்பிறவி, பெண்மைபோல்

நாணம் நோற்று உயர்ந்தது, நங்கை தோன்றலால்' (69) இராவணன் பன் மணிகள் ஒளி வீசும் முடியுடன் வந்த தால் இரவு பகலாயிற்றாம். - 'வகைய பொன் மகுடம் இளவெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான்' (74) இராவணன் தன் உயிர் குடிக்கும் நஞ்சை, அமிழ்தம் என எண்ணி விரும்புகின்றானாம். இங்கே நஞ்சு சீதை. "வெவ்விடத்தை அமிழ்தென வேண்டுவான்' (97) -