பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 திங்களும் இருக்கத் தோன்றுவது போல திருமால் இரு கைகளிலும் ஆழியும் வளையும் தாங்கியுள்ளார் என இளங்கோவடிகள் கூறியுள்ளார். 'விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக் கொடி உயர்த்து விளங்குவில் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி' (காடு காண் காதை: 43-48) என்பது பாடல் பகுதி. கம்பரும் இத்தகைய கற்பனையை விட்டாரிலர். தான் இறந்து விடப் போவதாகச் சீதை அனுமனிடம் கூறி, இராமரை அயோத்திக்குச் சென்று பட்டம் சூட்டிக் கொள்ளச் சொல்-அங்குள்ள எல்லாருக்கும் என் வணக்கத்தைச் சொல்டஎன்றெல்லாம் பல செய்திகள் கூறினாள். கேட்ட அனுமன், சீதையை நோக்கி, நீ சாகமாட்டாய். உன்னைப் பிரிந்து இராமர் உயிர் வாழார்; அவர் அயோத்தி சென்று நீ இல்லாமல் முடி சூடிக் கொள்ளார்; இலங்கையில் இராவணன் மகிழ்ச்சியுடன் வாழான்; வில்லேந்திய இராம இலக்குமணர் போகார், என்ற மாதிரியில் கூறவில்லை. பின் எவ்வாறு அனுமன் கூறினான்? சீதையே! இங்கேயே நீ இறந்து விடுவாய் என்பதும் மெய்யே! இராமன் உன்னைப் பிரிந்தும் உயிர் வாழ்வார் என்பதும் அயோத்திக்குச் சென்று அவர் முடிக் கொள்வார் என்பதும் உண்மையே! உன்னைச் சிறையிட்ட இராவணன் உயிர் வாழ்வதும் உறுதி! உன்னை மீட்காமல் வில்லேந்திய இராம இலக்குமணர் போய் விடுவார்கள் என்பதும் நடக்கக்