பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கூடியதே-என்று எதிர் மறையாக அனுமன் கூறியிருப்பது சுவை பயக்கிறது. (சூடாமணிப் படலம்) 'iவாய் நீயிவண் மெய் யஃதே! ஒய்வான் இன்னுயிர் உய்வானாம்! போய்வான் அந்நகர் புக்கன்றோ வேய்வான் மெளலியும் மெய்யன்றோ? (40), கைத்தோடும் சிறை, கற்போயை வைத்தோன் இன்னுயிர் வாழ்வானாம்! பொய்த்தோர் வில்லிகள் போவாராம்! இத்தோடு ஒப்பது யாதுண்டோ! (41). இவ்வாறு நடக்கக் கூடியது வேறு யாதுளது? என அனுமன் சொன்னதாகக் கம்பர் கருத்து வெளியீட்டில் ஒரு புது முறையைக் கையாண்டிருப்பது சுவைக்கத் தக்கது. 'அன்னையே, எங்களுக்கு வாலியிடத்திலிருந்து அரசச். செல்வத்தை மீட்டுத் தந்த இராமனுக்கு. நீந்தமுடியாத துன்பக் கடலில் நீ நீந்திக் கொண்டே இராதபடி உன்னை மீட்டுத் தரவில்லையெனில், எங்களினும் உயர்ந்தவர் யார் உள்ளார்?' என்றனன். உன்னை மீட்டு இராமனிடம் தராவிடின் நாங்கள் நன்றி மறந்தவராய்-தாழ்ந்தவராய் மதிக்கப்படுவோம் என்று சொல்வதற்குப் பதிலாக, எம்மினும் உயர்ந்தார் யார் என அனுமன் எதிர் மறையாகக் கூறியிருப்பதாகக் கம்பர் அமைந்திருப்பதும் ஒரு வகைப் புதுமை! 'நீந்தா இன்னலின் நீந்தாமே தேய்ந்தாறாத பெருஞ் செல்வம் ஈந்தானுக்கு உனை ஈயாதே ஒய்ந்தால் எம்மின் உயர்ந்தோர் யார்?" (43),