பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 என்பது பாடல். இப்பாடலில் உள்ள 'நீந்தா இன்னலின் நீந்தாமே என்னும் முதலடி, ஒரு திருக்குறளுக்குப் பொருத்தமான உரை காண உதவுகின்றது. சுவையான அச்செய்தியைக் காண்பாம்: 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்' (கடவுள் வாழ்த்து-10) என்னும் குறளுக்குப் பரிமேலழகர் உள்ளிட்ட உரை யாசிரியர்கள் பலரும், இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார்; சேர்ந்தார் நீந்துவர் எனச் சேர்ந்தார் என்னும் ஒரு சொல்லை வருவித்துப் பொருள் கூறியுள்ளனர். அங்ங்ன மெனில் சேர்ந்தார் என்னும் சொல்லை வள்ளுவர் குறளில் அமைக் காதது, எப்படிக் கூர்மையாக எண்ணிப் பார்க்கினும் குறை யுடையதாகவே தோன்றுகின்றது. வள்ளுவர் விரும்பினால் இக்குறை வராதவாறு செய்யலாம். வேறு சில குறள்களிலும், இவ்வாறு இல்லாத சொல்லையோடசொற்களையோ வருவித்துச் சில உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர். இங்கெல்லாம், இல்லாத எந்தச் சொல்லையும் புதிதாக வருவிக்காமல் பொருள் கூறமுடியும். எனவே, இக்குறளுக்கு இல்லாத சேர்ந்தார்’ என்னும் சொல்லை வரு விக்காமலே எவ்வாறு பொருள் செய்வது என முயன்று பார்க்கலாம்.

  • பிறவிப் பெருங்கடல் நீந்துவருள் நீந்தார்

இறைவனடி சேராதார்' எனக் குறளை வள்ளுவர் அமைத்திருக்கலாம். இதற்கு, பிறவிப் பெருங்கடலை நீந்திக் கொண்டிருப்பவர்கட்குள் இறைவனடி சேராதார் நீந்தார் என எளிதில் பொருள் கொள்ளலாம். ஆனால் வள்ளுவர். நீந்துவருள்” என்னாது 'நீந்துவர் என்றே அமைத்துள்ளார். இங் ே தான் கம்பராமாயணப் பாடல் பகுதி துணை செய்கிறது. சீதை இராமனைப் பிரிந்து இராவணனிடம் அகப் பட்டுக் கொண்டு வருந்துவது, நீந்தமுடியாத துன்பக்