பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 தீமை நீங்க நன்னாட்களில் கடலில் குளித்துப் பின்னர் அழுக்குப் போகக் காவிரி நீரில் குளிப்பார்களாம். இந்தச் செய்தியை உள்ளத்தில் வைத்துக் கொண்டு கல்வியில் பெரிய கம்பர் இந்தப் பாடலை எழுதியுள்ளார். மீண்டும் அனுமன் சீதையிடம் கூறுகின்றான் அன்னையே! இராவணன் இறந்த பின், முரசு முழங்க, யாழிசை ஒலிக்க, தேவமாதர்கள் அரங்கில் நடனம் ஆட, அதை நம் வானர்கள் கண்டு மகிழ்ச்சியால் குதிக்கப் போவதைக் காண்பாய். 'கரம்பயில் முரசினம் கறங்க, கைதொட ர் நரம்பியல் இமிழிசை நவில, நாடகம் அரம்பையர் ஆடிய அரங்கின், ஆண் தொழில் குரங்குகள் முறைமுறை குனிப்பக் காண்டியால்..' (57) குரங்குகள் காணும் நடனம் ஒன்று மணிமேகலை நூலில் கூறப்பட்டுள்ளது: தும்பிகள் குழலூத வண்டுகள் யாழ்மீட்ட, மயில் ஆடும் நடன அரங்கை மந்திகள் காண் கின்றனவாம்:-பளிக்கறை புக்க காதை: 'குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய வெயில் நுழைபறியாக் குயில் நுழை பொதும்மர் மயிலாடு அரங்கின் மந்தி காண்பனகாண்' (3–4) என்னும் மணிமேகலை அரங்கைக் கம்பரும் காட்டி யுள்ளார்; கல்வியில் பெரியவராயிற்றே! இறக்கும் அரக்கர்களின் குருதியாகிய வெள்ளம் கடலில் கலக்க, மிகுதியான நீரைக் கடல் வாங்க முடியாமையால், அக்குருதி நீர் கடலினின்றும் மீண்டு ஆற்றில் எதிர்த்து வருவதைக் காணப் போகிறாய்: 'நீல் நிற அரக்கர்தம் குருதி நீத்த நீர் வேலை மிக்கு ஆற்றொடு மீள...' (63)