பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இப்போதும் சில இடங்களில் கடல் நீர், தன்னிடம் வந்து புகும் ஆறுகளில் எதிர்த்துப் புகுவதையும் ஆற்றுநீர் உப்பு கரிப்பதையும் காணலாம். இவ்வாறு எதிர்த்து வந் துள்ள நீருக்கு Back water என்னும் பெயர் ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இதைத் தமிழில் எதிர் ஏறு நீர்' என்று கூறலாம். உலகம் அழியும் ஊழிக் காலத்தில், அளவற்ற உயிர் களைத் தெவிட்டாமல் உண்ணக்கூடிய எமனும், இராம னால் அரக்கர்கள் அனைவரும் கொல்லப்பட, உயிர்களை உண்ணும் எமன், உயிர்களாகிய உணவு மிகுதியால் செரிமானம் இன்றிப் பல உயிர்களை வெளியில் கக்கப் போவதை (வாந்தி எடுக்கப் போவதை) அன்னையே, நீ காணப் போகிறாய்: 'ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறாக் காலனும் வெறுத்து உயிர் காலக் காண்டியால்' (63) 'உயிர் கால’ என்பதற்கு, உயிரைக் கக்க-என்னும் பொருள் செய்தலன்றி, உண்ண முடியாமையால் பெரு மூச்சுவிட' என்றும் பொருள் கூறுவதுண்டு. இக் கருத்துகள் எல்லாம் புதுமையாக உள்ளன அல்லவா? - அன்னையே, நீ குறித்த நாளுக்குள் இராமன் வந்து உன்னை மீட்கவில்லையெனில் இராமனைப் பழி பாவம் சுற்ற, அருளில்லாத இராமன் இராவணனாகக் கருதப்படு வான்; இராவணன் இராமனாக மாறிக் காணப்படுவான். 'குராவரு குழலி நீ குறித்த நாளினே விராவரு நெடுஞ்சிறை மீட்கிலான் எனின், பராவரும் பழியொடு ப வம் பற்றுதற்கு இராவணன் அவன்; இவன் இராமன் என்றனன்” (74) இப்பாடலில் கம்பர் அப்படியே மாற்றிப் போட்டுக் காட்டி வியக்கச் செய்துள்ளார். -