பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காவல் காக்கின்றனராம். இவர்களைப் பருவத்தேவர் என் கிறார் கம்பர். பருவத்துக்குப் பருவம் எனப் பெரும் பொழு தாகவும் கொள்ளலாம். டுட்டி மாற்றுதல்' என்று இப்போது சொல்வது போல் குறிப்பிட்ட கால அளவில் முறை மாற்றி யும் காவல்புரிவர். இவர்கள், அனுமன் அசோக வனத்தை அழித்த போது, நீர் நனைந்த உடையினராய், அச்சமாகிய நெருப்புற்ற நெஞ்சினராய், நெகிழ்ந்த உருவினராய், தளர்ந்து பின்னுகிற கால்களை உடையவராய், வாய் பிளந்து கூவி அலறிக் கொண்டே ஓடினராம்: " நீரிடு துகிலர், அச்ச நெருப்பிடு நெஞ்சர்; நெக்குப் பீரிடும் உருவர்; தெற்றிப் பிறங்கிடு தாளர்; பேழ்வாய், ஊரிடு பூசல் ஆர உளைந்தனர் ஓடி உற்றார் பாரிடு பழுவச் சோலை பாலிக்கும் பருவத் தேவர்.' (55). அச்சத்தால் ஏற்பட்ட வியர்வையால் உடல் நனைந்து போயிற்று என்ற பொருளிலும் 'நீரிடு துகிலர்' என்பதைக் கொள்ளலாம்; அடுத்து அச்சத்தை நெடுப்பாகச் சொல்லி விட்டதால், அச்சத்தால் உடையிலேயே சிறுநீர் கழித்துக் கொண்டனர்-என்றும் கூறலாம். 'அவன் பயந்து போய். ஒன்றுக்கு (சிறுநீர்) விட்டுக் கொண்டான்' என்று. சொல்லும் வழக்காறு ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. (இக் காலத்தில் பலர் சிறுநீர் கழிப்பதில்லை-'யூரின் பாஸ்’ பண்ணுகிறார்கள் ) (கிங்கரர் வதைப்படலம்) உலகியலில் ஒரு கூட்டம் தொடர்ந்து சென்று கொண் டிருக்கும் போது-இடையில் தடை ஏற்பட்டால்-அதாவது, முன்னால் இருப்பவர்கள் நகராது நின்றால், பின்னால் இருப்பவர்கள் ஏன் கூட்டம் நிற்கிறது-ஏன் கூட்டம் நிற்கிறது?-என்று கேட்பார்கள். அதற்கு, முன்னால் இருப் பவர்கள், என்ன காரணம் என்று தெரியவில்லை-எங். களுக்கும் முன்னால் இருப்பவர்கள் நகரவில்லை-என்ன