பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 காரணம் என்று தெரியவில்லை எனக் கூறுவார்கள். பிறகு, பின்னால் உள்ள அவசரக் குடுக்கைகள் சிலர் முன்னால் இருப்பவரின் முதுகை இடித்து உந்தித் தள்ளிக்கொண்டு முன்னேற முயல்வர், இவ்வாறே அரக்க வீரர்கள், ஏன் கூட்ட ம் நிற்கிறது என்று கேட்பவர்க்கு, ஏன்-ஏன் = என்பது தெரியவில்லை எனப்பதில் இறுத்தனராம். பின் னால் உள்ளவர்கள் முன்னால் இருப்பவரின் முதுகு தீயும் படி முடுக்கினராம்: "என் என்றார்க்கு, என் என் என்றார்; எய்தியது அறிந்திலாதார்; முன்நின்றார் முதுகு தீயப் பின் நின்றார் முடுகுகின்றார்” (9) முன்னின்றவர் முதுகு தீயும்படி-எரிச்சல் உண்டாகும் படி- உறுத்தும்படி முடுக்குகின்றார்களாம். இங்கே, நேரில் பட்டறிந்த நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது. ஒருமுறை புதுச்சேரியிலிருந்து பேருந்தில் சென்னைக்குச் சென்று கொண்டிருந்த பொழுது, நாங்கள் சென்ற பேருந்து, முன்னால் உள்ள பல பேருந்துகள் நகராமல் நின்று கொண்டிருந்ததால் தானும் நகரவில்லை. அப் போது, எங்கள் பேருந்தில் இருந்த ஒருவர் முன்பின் அறியாத இன்னொருவரை நோக்கி, ஏன் வண்டி நின்று விட்டது - ஏன் வண்டி நின்று விட்டது- என்று அடிக்கடிக் கேட்டார். அதற்கு மற்றவர், ஏனையா, நானும் உன்னைப் போல் உள்ளே தானே உட்கார்ந்து கொண்டுள்ளேன். எனக்கு மட்டும் நிற்பதற்குக் காரணம் தெரியுமா? -ஏன் சும்மா கேட்டு என் உயிரை வாங்குகிறாய்- என்று கூறி விட்டு, கேட்டவரின் பக்கத்திலிருந்து எழுந்து வேறிடத்தில் போய் அமர்ந்து கொண்டார். கம்பன் உலகியல் நிகழ்ச்சிகள் பலவற்றைத் தன் காப்பியத்தில் பிழிந்து தந்துள்ளான் என்பதற்கு இப். பாடலும் ஒரு தக்க சான்றாகும்.