பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 போருக்கு மிக்க- பெரிய கூட்டமாகச் செல்லும் அரக்கர்களுள் சிலர், தெரு இடம் போதவில்லை என்று வானில் பறந்து சென்றனராம்; சிலர், புருவமும் வில்லும் வளையப் புகையெனப் பெருமூச்செறிந்து சென்றனராம்; சிலர், ஒருவர் பின் ஒருவர் என்ற வரிசை முறை மாறி- ஒருவரையொருவர் மாறி மாறி முந்திக் கொண்டு சென்றார்களாம்; சிலர், இலங்கையின் அகலமும் நீளமும் போதவில்ல்ை என்று கூவிக் கொண்டு சென்றனராம்: "தெரு இடம் இல்லென் றெண்ணி வானிடைச் செல்கின்றாரும், புருவமும் சிலையும் கோட்டிப் புகை உயிர்த்து - உயிர்க்கின்றாரும், ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும், விரிவிலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும்' (13) இங்கே, ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும்’ என்ற பகுதி கருதத் தக்கது. முறை' என்றது, 'இப்போது கியூ வரிசை (Queue) என்று சொல்லப் படும் அடைவு முறையாகும்- தொடர் வரிசையாகும். இப்போது, தொடர் வரிசையில் நிற்பவர்கட்குள் பின்னால் இருக்கும் யாராவது முன்னால் சென்று நிற்கின், மற்றவர் சினந்து அவரைக் கடிவதும் பின்னால இழுத்து விடுவதும் உண்டு இதைத்தான், இப்பகுதியில் குறிப்பிட்டுள்ளார். 'உருக்கின்றார்’ என்றால், ஒருவர்க்கொருவர் சினந்து பேசிக் கொள்கின்றனர் என்று பொருளாம். கம்பன் கியூ' வரிசையையும் விடவில்லை. அனுமன் கிங்கரர்களுடன் கடும்போர் புரிந்து பலரைக் கொன்று குவித்துக் கொண்டேயிருக்கின்றான். உடல்களி லிருந்து உயிர்கள் பிரிந்து விட்டன. உயிர்களைப் பிடித்துச் செல்லும் எமன், பிடித்துப் பிடித்து முடியாமல் ஓய்ந்து