பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 உட்கார்ந்து விட்டான். அதனால், உடல்களை விட்டுப் பிரிந்த உயிர்கள், விண்மீன்களிலும் முகில்களிலும் மேலே வான மண்டலத்திலும் தொத்திக் கொண்டும் சுற்றிக் கொண்டு இருந்தனவாம்: 'ஊனெலாம் உயிர்கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்;. தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான்; மீனெலாம் உயிர், மேகமெலாம் உயிர், மேன்மேல் வானெலாம் உயிர், மற்றும் எலாம் உயிர் சுற்றி (45). இராவணன் அரக்கர்களைக் கண்டிப்பதை, வாய் தொறும் நெருப்பு உமிழ்கின்றான்' (57) என்பதாகக் கம்பர் கூறியுள்ளார். சம்புமாலி என்னும் படைத் தலைவன், இராவணனின் சினம் போவது போல் போருக்குச் சென்றானாம். இதை, 'இலங்கை வேந்தன் போர்ச் சினம் போவது ஒப்பான்' என்று கம்பர் கூறுகிறார். (சாம்பு மாலி வதைப் படலம்) அரக்கர்களின் படைத்தலைவர்களுள் ஒருவனாகிய சம்புமாலி என்பவன், அனுமனுடன் போர்புரியத் தன் படையை அணிவகுப்பு செய்து வருகிறான். அணிவகுத்தல் என்றால், தலைவனின் முன்னால் இந்திந்தப் படையும் நடுவில் இந்திந்தப் படையும், பின்னால் இநதிந்தப் படை யும் தலைவனின் இருபக்கங்களிலும் இன்னின்ன படையும் இருக்கும்படி அமைத்தல் ஆகும். அரக்கர் பலராதலால் சம்புமாலி அவ்வாறு அணி வகுப்பு செய்ய முடிந்தது. ஆனால், அனுமனோ தனி ஆள். இருப்பினும் இவன் செய்து கொண்ட அணிவகுப்பு வியக்கத்தககது. முன்னால் உள்ள படைக்கு நெற்றி” என்றும், பின்னால் உள்ள படைக்குக் கடைக்கூழை என்றும், நடுவில் உள்ள