பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 படைக்குப் பேரணி என்றும், இரு பக்கங்களிலும் உள்ள படைக்குக் கைப்படை' என்றும் பெயர் வழங்கப்பெறும். இங்கே அனுமன், தன் நெற்றியையே நெற்றிப்படை யாகவும், தன் உடம்பில் நீட்டிக் கொண்டிருக்கும் மயிர் களையே பேரணிப் படையாகவும், தன் வாலைக் கடைக் கூழைப் படையாகவும், தன் இரு கைகளையும் கைப்படை யாகவும், கைகளில் உள்ள நகங்களை வாளாகவும் கொண்டு தன்னைத் தானே அணிவகுத்துக் கொண்டான். 'ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் - அளவில் ஆற்றல் நெய்சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றி யாக, மொய்ம்மயிர் சேனை பொங்க, முரண்அயில் உகிர்வாள் மொய்த்த கைகளே கைகள் ஆகக் கடைக் கூழை - திருவால் ஆக' (21) என்பது பாடல். நூலாசிரியருக்கு அனுமனைத் தனியாக விட விருப்பமில்லை போலும். அதனால் அனுமனையே ஒரு பெரும் படையாகப் படைத்துக் காட்டி மகிழ்வித்துள் ளார. அனுமன் சம்புமாலியுடன் போர் புரியும்போது ஓரிடத்தில் நில்லாமல், அரசரது ஆணைச் செங்கோல் போலவும், அறவோரின் அறிவு போலவும், முலை விலை பகரும் வேசியரின் மனம் போலவும், காற்றாடி போலவும் மேலும் கீழும் பக்க வாட்டத்தில் பரந்தும் சுற்றித் திரிந்து கொண்டே இருந்தானாம்: 'பிரிவரும் ஒருபெருங் கோலெனப், பெயரா இருவினை துடைத்தவர் அறிவுஎன எவர்க்கும் வருமுலை விலைக்கென மதித்தனர் வழங்கும் தெரிவையர் மனமெனக், கறங்கெனத் திரிந்தான்' (35)