பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 கோல் என்பது செங்கோல், அரசரது செங்கோல் ஆணை நாடு முழுதும் பரந்திருக்கும். இருவினை நீங்கிய அறவோரின் அறிவு எல்லா உயிர்களும் இன்பம்.உற வேண்டும் எனப் பரந்த பான்மையுடன் செயல்படும். "அப்பாநான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல்வேண்டும்’என்னும் இராமலிங்க வள்ளலாரின் அருட்பாப் பகுதியும், 'எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்னும் தாயுமானவரின் பராபரக் கன்னிப் பாடலும், 'தாமின் புறுவது உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந் தார்' (399) என்னும் குறட்பாவும், கம்பரின் 'இருவினை துடைத்தவர் அறிவு என' என்னும் தொடருக்குப் பொருள் விளக்கம் தரும். முலையை விலை பகர்ந்து-அதாவது வருபவரிடம் பொருள் பெற்றுப் புணர்ந்து வாழும் வேசியரின் உள்ளம், இன்னும் யார் வருவார் அவர்-வருவாரா-இவர் வருவாரா என்று எண்ணி, ஒருவரோடு நில்லாது பலர்பாலும் சென்று திரியும். காற்றாடி மேலும் கீழும் பக்க வாட்டத்திலும் பறந்து திரியும். அதனால், இவை சுற்றித் திரியும் அனும னுக்கு உவமையாக்கப்பட்டுள்ளன. - பொருள் விரும்பிப் புணரும் வேசியர் என்று சொன் னால் போதாதா? முலை விலை பகர்பவர் என்று சொல்ல வேண்டுமா? சிலர் நாடகங்களிலும் திரையோவியங்களிலும் பெண்களின் முலைகள் எடுப்பாக இருப்பதாகப் பொய் யாகப் புனைந்து காட்டிப் பார்ப்பவர்களை மயக்கிப்பொருள் ஈட்டுவது கண்கூடு. சில இதழ்களிலும் இவ்வாறு படம் போடுவர். இவர்களும் முலைவிலை பகர்பவர்களேயாவர், வேசியரின் முதற்பொருள் (மூலதனம்) எடுப்பான முலை