பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 களே. வருமுலை' என்றார் கம்பர். மேலும் மேலும் இயற்கையாகவோ-அல்லது-செயற்கையாகவோ பெரிதாக வளர்ந்து வருவது போல் தோற்றம் அளிக்கும் முலைகளாம். அவ்வளவு ஏன்? திருவள்ளுவரே கூட, முலைகளின் 'மாபெருஞ்சிறப்பைக் கூற மறந்தாரிலர். கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று' (402) என்று பாடிப் பெருமூச்சு விட்டுள்ளார். எனவே, வாய்ப்பு கிடைத்தபோது கம்பர் மட்டும் விடுவாரா என்ன! வேசியர் மேலும் மேலும் வருபவர்களை எதிர்நோக்குவது போல, அனுமன், மேலும் மேலும் அரக்கர்கள் போருக்கு வர மாட்டார்களா என்று எதிர்பார்த்துத் துடித்துக் கொண் டிருந்தான் என்னும் பொருள் நயமும் இதனால் புலனாகும். (பஞ்ச சேனாதிபதிகள் வதைப்படலம்) அரக்கர்கள் ஏந்தி வரும் போர்க் கொடிகளைப்பற்றிக் கம்பர் கூறுகிறார்: முகில் மண்டலம் வரையும் சென்று முகிலைக் குத்துகின்றனவாம் கொடிக்கம்பங்கள். கம்பின் நுனியில் இருக்கும் கொடித் துணிகள். போய்விட்ட பகைவர் களின் புகழ் போலவும், வானகத்துக் கங்கையின் வெண்மை யான அலை போலவும் இருந்தனவாம்: 'தானை மாக்கொடி மழைபொதித்து உயர் நெடுந்தாள், மானம் மாற்றரு மாருதிமுனிய நாள் உலந்து போன மாற்றலர் புகழ் எனக் கால்பொரப்புரண்ட வானயாற்று வெண்திரையென வரம்பில பரந்த" (7): புகழை வெண்ணிறமாகக் கூறுவது ஒரு வகை இலக்கிய மரபு என்னும் கருத்து, இந்நூலில் வேறோர் இடத்திலும் கூறப்பட்டுள்ளது. கொடித் துணி வெள்ளையாதலின் அதற்குப் புகழ் ஒப்புமையாக்கப்பட்டது.